இராணுவத்தின் போர் குற்றங்கள் தொடர்பில் முன்னாள் இராணுவ தளபதி சர்ச்சை கருத்து!

0

போர் காலங்களில் சட்டத்தை மீறிய இராணுவத்தினருக்கு அந்த சந்தர்ப்பங்களிலேயே தண்டனை வழங்கப்பட்டுள்ளது என முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் தயா ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

நேற்று (20) கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் இது தொடர்பில் கருத்து கூறிய இராணுவ தளபதி அங்கு மேலும் உரையாற்றும் போது,

இராணுவத்தினர் ஒரு போதும் போர்க்குற்றங்களில் ஈடுபடவில்லையெனவும் இராணுவ சேவையில் இருந்தபடி சட்டத்தை மீறி போர்க்குற்றச்சாட்டில் ஈடுபட்ட இராணுவத்தினரை ஒருபோதும் இராணுவம் பாதுகாக்கவில்லையென்றும் தெரிவித்துள்ளார்.

தற்போது வரை இராணுவ அதிகாரிகள் 8 பேரும், வீரர்கள் 25 பேரும் கைதாகியுள்ளனர். அதேபோல, கடற்படை அதிகாரிகள் 7 பேரும், கடற்படை வரர்கள் 10 பேரும் கைதாகியுள்ளனர். இதில் நால்வர் இன்னும் சிறையிலேயே இருக்கிறார்கள்.

இதுவரை இராணுவத்தில் மாத்திரம் 67 அதிகாரிகளும், 637 வீரர்களும் பல்வேறு சந்தர்ப்பங்களில் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.

முப்படை தளபதிகள் கைதாகிறார்கள். விடுவிக்கப்படும்போது அவர்கள் மீது எவ்வித குற்றங்களும் இல்லாமல் உள்ளன.

இராணுவத்தினரை கைது செய்து நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதாயின் அது குறிப்பிட்ட ஒரு தரப்புக்கு மாத்திரமே நன்மை பயக்கும். ஆனால் அப்படி நடக்க இடமளிக்க முடியாது“ எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.