ஒரு சிங்களக் குடும்பத்தின் புலிகள் பற்றிய உயர்ந்த நினைவுகள்!

0

போரின் போது காயமடைந்த நிலையில் தமிழீழ விடுதலை புலிகளிடம் சரணடைந்த சிங்கள இராணுவ வீரன் ஒருவனை பார்வையிட தென்னிலங்கையில் இருந்து விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிக்கு வரும் அந்த இராணுவத்தினரின் குடும்பத்தினை மரியாதையுடன் வரவேற்கும் ஒரு போராளி…!

விடுதலைப்புலிகள் எத்தனை உயர்வானர்கள் என்பதற்கும், போரில் சரணடைந்த எதிரிகளையும், கைது செய்யபட்ட சிங்கள படையினரையும் எந்த அளவுக்கு கண்ணியத்துடனும், யுத்த தர்மத்துடன் நடத்தினர் என்பதற்க்கு பல சாட்சிகள் உள்ளன. அவற்றில் ஒன்றுதான் இந்த படம்.

விடுதலைப்புலிகளின் பாரிய வெற்றிதாக்குதல்களில் ஒன்றாக கருதப்படும் ஓயாத அலைகள் ஒன்று தாக்குதலில் விடுதலைப்புலிகள் சுமார் 600 சிங்கள இராணுவத்தினரை பிணமாக மீட்டனர். ஆனால் அந்த உடல்களை இலங்கை அரசு ஏற்க மறுத்தது. பின்னர் விடுதலைப்ள்புலிகள் அந்த உடல்களை சகல இராணுவ மரியாதைகளுடன் கொக்காவில் எனும் இடத்தில் அடக்கம் செய்தது விடுதலைப்புலிகளின் போரியல் தர்மத்திற்கு ஓர் அடையாளம்.

தமது சொந்த நாட்டு இராணுவத்தினரின் உடல்களையே ஓர் அரசு ஏற்க மறுத்த நிலையில், அந்த இராணுவத்தினரின் எதிரிகள் அந்த உடல்களை சகல மரியாதைகளுடன் அடக்கம் செய்த நிகழ்வு உலகில் வேறு எங்கு நிகழ்ந்திருக்க முடியும்?

பல சமர்களங்களில் விடுதலைப்புலிகளினால் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்ட இராணுவத்தினரை விடுதலைப்புலிகள் அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகள் வழங்கி மீண்டும் அவர்களின் குடும்பத்தினருடன் அனுப்பி வைத்த நிகழ்வுகள பல உள்ளன.

இதனை விடவும் விடுதலைப்புலிகளின் மேன்மையினையும், அவர்களின் சிறப்பினையும் எடுத்துக் கூறும் பல நூறு வரலாற்று நிகழ்வுகள் ஈழத்து மண்ணில் நிகழ்ந்திருக்கின்றன. ஆண்டுகள் பல கடந்தாலும் அழியாத வரலாறாக என்றுமே புலிகளின் புகழ் இந்த உலகம் எங்கும் நிலைக்கும்.

Leave A Reply

Your email address will not be published.