கட்டுநாயக்க விமான நிலையத்தில் 5 வெளிநாட்டவர்கள் கைது !

0

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வியட்நாம் பிரஜைகள் ஐவர் இன்று பகல் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போலியாகத் தயாரிக்கப்பட்ட தென்னாபிரிக்க கடவுச்சீட்டினைப் பயன்படுத்தி உக்ரேனுக்கு செல்ல முயற்சித்த குற்றச்சாட்டில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுங்க திணைக்கள அதிகாரிகள் இதனை தெரிவித்துள்ளனர்.

குறித்த ஐவரும் 30 வயதுடையவர்களென்றும் இவர்கள் ஐவரும் கடந்த 18ஆம் திகதி அதிகாலை 12.40 மணியளவில் மலேசியாவிலிருந்து மலிந்தோ விமான சேவையான ஓ.பி.185 என்ற விமானம் மூலம் 60 வயதுடைய தென்னாபிரிக்க பிரஜையொருவருடன் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வந்துள்ளனர்.

இதன் பின்னர் அவர்கள் இன்று காலை உக்ரேன் நோக்கி செல்வதற்காக வருகைத் தந்தப் போதே கைது செய்யப்பட்டுள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.