கன்னியாஸ்திரிகள் பாலியல் அடிமைகளாக நடத்தப்படுகின்றனர் ! பகிரங்கமாக ஒப்புக் கொண்டார் போப்

0

ரோமன் கத்தோலிக்க திருச்சபைகளில் கன்னியாஸ்திரிகள் பாலியல் அடிமைகளாக நடத்தப்படுவதாக போப் பிரான்சிஸ் பகிரங்கமாக ஒப்புக் கொண்டுள்ளார்.

2019 ஆம் ஆண்டை சகிப்புத்தன்மை ஆண்டாக அமீரகம் கடைபிடிக்கிறது.

இந்த நிலையில் பட்டத்து இளவரசர் அழைப்பின் பேரில் அபுதாபி வந்த போப் பிரான்சிஸ் 1.70 லட்சம் மக்களுடன் பிரார்த்தனையில் ஈடுபட்டார்.

இந்நிலையில் கன்னியாஸ்திரிகள் பாலியல் கொடுமைகளுக்கு ஆளாவது தொடர்ந்து இடம்பெறுகிறது என்றும் அதை நிறுத்துவதற்கான பணிகளில் தாம் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான குற்றங்களில் ஈடுபட்ட மதகுருக்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து இதற்கு எதிராக போராடுவேன் என்றும் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.