கொழும்பில் நேற்றிரவு வான் ஒன்றைத் திறந்த அதிரடிப் படைக்கு காத்திருந்த அதிர்ச்சி!

0

கொழும்பில் நேற்றைய தினமும் 294 கிலோ ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுளதாக அதிர்சிகரமான செய்தி வெளியாகியுள்ளது.

அண்மையில் கைப்பற்றப்பட்ட ஹெரோயின் போதைப்பொருளின் பெறுமதியைவிட இது அதிகமானதாக காணப்படுவதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

கொழும்பு கொள்ளுப்பிட்டி வர்த்தக கட்டிடதொகுதி வாகனத் தரிப்பிடத்தில் வைத்து ஒரு சிற்றுந்திலிருந்தே இவை நேற்றிரவு மீட்கப்பட்டதாகவும் இவற்றின் பெறுமதி 2.94 பில்லியன் ரூபா என கணிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறுகின்றனர்.

போதைப்பொருள் தடுப்பு பிரிவு மற்றும் விசேட அதிரடிப்படை சுற்றிவளைத்து மேற்கொண்ட விசேட நடவடிக்கையின்போதே இது கைப்பற்றப்பட்டதுடன் பாணந்துறை கெசெல்வத்த பகுதியை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, அண்மைக்காலங்களில் இலங்கையில் கைப்பற்றப்பட போதைபொருளில் நேற்றிரவு கைப்பற்றப்பட்டதே அதிகமானதாக காணப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் 6ஆம் நாள் 231 கிலோவும், டிசம்பர் 31ஆம் நாள் 278 கிலோவும், இவ்வாண்டுஜனவரி மாதம் 17ஆம் நாள் 5 கிலோவும், ஜனவரி 22ஆம் நாள் 90 கிலோவும் கைப்பற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

Leave A Reply

Your email address will not be published.