சந்திரகுமாரை நோக்கி காறித் துப்பும் இளைஞன்!

0

உண்மையில் இந்த பதாகையில் எழுதப்பட்டிருக்கும் வசனத்தை வாசிக்கும் போதும் தற்போது காணமல்ப்போனவர்களின் உறவுகளால் முன்னெடுக்கும் போராட்டத்தில் கலந்து கொள்ளும் மனிதர்களை நினைக்கும்போதும் காறித்துப்ப வேணும்போல் உள்ளது,

கடந்த 2018 ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முடித்துக்கொண்டு வீடு திரும்பிய மனிதர்களுக்கு எங்களோடு போர் செய்து எங்கள் உறவுகளைக் கொன்ற இராணுவத்தினர் நீராகாரம் கொடுத்த போது மானமுள்ள தமிழனாக நீராகாரத்தைப் பருகாது எங்கள் எதிர்ப்பைக் காட்டியிருந்தோம்,

ஆனால் காணாமல்போனோரினால் ஒழுங்கு செய்யப்பட்ட போராட்டத்தில் மகிந்தவுடன் இருந்து அத்தனை காணமல்ப்போனவர்களின் கண்ணீருக்கு காரணமாக இருந்தவர்கள் சோறும் யூஸ் ம் கொடுத்தபோது வெட்கமே இல்லாமல் வாங்கிக்கொண்டோம்,

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் பின்
எதிரியிடம் காட்டிய மானம் ரோசம் கோபம்
இதில் எதையும் துரோகிகளிடம் காட்டாது பின் நிப்பது ஏன்?

உண்மையில் காணமல்ப்போனவர்களின் போராட்டங்கள் வெற்றியளிக்க வேண்டும் என்றால், காணமல் போகச்செய்தவர்களோடு உடந்தையாக இருந்த துரோகிகளை இப்பிடியான போராட்டங்களிலிருந்து விலத்தி வைப்பதே நல்லதாகும்.

ஏனெனில் எப்போதும் எதிரிகளைவிட துரோகிகளே ஆபத்தானவர்கள்,

Image may contain: 1 person, tree and outdoor

கடலூரான் சுமன்

Leave A Reply

Your email address will not be published.