`சீமானின் ஆட்கள்தான் என்னை வெட்டினார்கள்!’- உயிர் தப்பிய சேலம் ரஜினி ரசிகர் கண்ணீர்

2

சீமானின் நாம் தமிழர் கட்சிக்காரர்கள் தன்னை வெட்டியதாக சேலத்தைச் சேர்ந்த ரஜினி ரசிகர் ரஜினிபழனி கண்ணீர் மல்கக் கூறினார். பலத்த காயமடைந்த அவர், சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த ரஜினிபழனியிடம் இதுபற்றி கேட்டதற்கு, “நான் சேலம் இரும்பாலை அம்மன் தியேட்டர் அருகே குடியிருக்கிறேன். என் மனைவி பெயர் சுமதி. எனக்கு 3 பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். நான் ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் போலீஸில் இருக்கிறேன். நான் சின்ன வயதிலிருந்து ரஜினியின் தீவிர வெறியன். ரஜினியை என் உயிருக்கு மேல் அதிகமாக நேசிக்கக்கூடியவன். நான் ரசிகர் மன்றத்திலெல்லாம் கிடையாது. என் தலைவர் ரஜினியை முதலில் சீமான் ஒருமையில் விமர்சனம் செய்தார். அதையடுத்து நானும் சீமானை ஒருமையில் விமர்சனம் செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டேன். அதைத் தொடர்ந்து சீமான் கட்சிக்காரர்கள் எனக்கு சமூக வலைதளங்களிலும், செல்போன் மூலமும், தொடர்ந்து மிரட்டல் விட்டார்கள்.

அருள்ராம்

அவர்களின் குண்டு மிரட்டலுக்கு பயப்படாமல் சீமானுக்கும், நாம் தமிழர் கட்சிக்காரர்களுக்கும் தொடர்ந்து சமூக வலைதளங்களில் பதிலளித்து வந்தேன். என் தலைக்கு சீமானின் ஆட்கள் விலை பேசினார்கள். அதைப்பற்றி கண்டுகொள்ளவில்லை.என் தரப்பு நியாயமான கருத்துகளை பதிவு செய்து வந்தேன். இன்று காலை 6 மணிக்கு வீட்டை விட்டுக் கிளம்பி அஸ்தம்பட்டி போகும் போது அழகாபுரம் அருகே சீமான் கட்சியைச் சேர்ந்த வீரமணி, வெள்ளியங்கிரி மற்றும் 2 பேர் முகமூடி அணிந்து வந்தார்கள். திடீரென என் காரைச் சுற்றி வளைத்து கையில் கொண்டு வந்திருந்த கொடுவாளால் தலையில் சரமாரியாக வெட்டினார்கள். நான் ரத்த வெள்ளத்தில் அங்குமிங்குமாக ஓடினேன். ஒரு நபர் நுழையக் கூடிய சாக்கடை பாலத்துக்குள் புகுந்து கொண்டேன். அதனால் அவர்கள் உள்ளே வர முடியாமல் ஓடிவிட்டார்கள். இதனால் உயிர் தப்பினேன். அந்தச் சமூக விரோதிகளைக் காவல்துறை சும்மாவிடக் கூடாது. சீமானின் ஆட்கள் தான் இந்தக் காரியத்தைச் செய்திருக்கிறார்கள்” என்றார்.

ரஜினிபழனியை மருத்துவமனைக்குப் பார்க்க வந்த ரசிகர் மன்ற நிர்வாகிகள், “ரஜினிபழனி மன்றத்தில் இல்லை. ஆனால் தலைவரின் தீவிர ரசிகர். அவர் சமூக வலைதளங்களில் தொடர்ந்து நாம் தமிழர் கட்சியினருக்கு கவுன்ட் கொடுத்து வந்ததால் பலி வாங்கி இருக்கிறார்கள்” என்றார்கள்.

இதுபற்றி நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் அருள்ராம், “வன்முறை மீது எங்களுக்கோ எங்கள் தலைவர் சீமானுக்கோ நம்பிக்கை கிடையாது. அவருடைய முகநூலில் தொடர்ந்து சீமான், வேல்முருகன், திருமா, வைகோ போன்ற தலைவர்களை விமர்சித்து இருக்கிறார். நாங்கள் காவல்நிலையத்தில்வழக்குக் கொடுத்தோம். அவர் தலைமறைவாக இருப்பதாகச் சொன்னார்கள். அவர் திட்டமிட்டு  விளம்பரத்துக்காக அவரே செய்திருக்கலாம். அவர் குறிப்பிடும் பெயர்களில் எங்கள் கட்சியில் எந்தப் பொறுப்பாளரும் இல்லை” என்றார்.

2 Comments
 1. Murugan says

  அன்புத்தம்பி நாடகம் போட்டு ஏதோ ஒத்திகை பார்க்கிறார் எல்லாம் தேர்தல் நெருங்கும் நேரத்தில் எதையாவது செய்து சில பேர் முகவரி தேடிக் கொள்ளலாம் ஆனால் இந்த முகத்தில் என்ன வரியை போடுவது மோடியை நினைத்து ஜிஎஸ்டி வரியை வேண்டுமானால் போடலாம்.
  நாடகம் போடும் போட்டாலும் தெளிவா போடணும் எல்லாருக்கும் தெரிவிக்கப்படுகிறது வயித்து மேல செல்போன் வச்சிருக்கே!?.
  இப்ப புரியுதா இந்த நாடகம்!.

 2. Murugan says

  அன்புத்தம்பி நாடகம் போட்டு ஏதோ ஒத்திகை பார்க்கிறார் எல்லாம் தேர்தல் நெருங்கும் நேரத்தில் எதையாவது செய்து சில பேர் முகவரி தேடிக் கொள்ளலாம் ஆனால் இந்த முகத்தில் என்ன வரியை போடுவது மோடியை நினைத்து ஜிஎஸ்டி வரியை வேண்டுமானால் போடலாம்.
  நாடகம் போடும் போட்டாலும் தெளிவா போடணும் எல்லாருக்கும் தெரிவிக்கப்படுகிறது வயித்து மேல செல்போன் வச்சிருக்கே!?.
  இப்ப புரியுதா இந்த நாடகம்!.

Leave A Reply

Your email address will not be published.