சுமந்திரன் வெளியிட்டுள்ள சொத்து மதிப்பு விபரம் எவ்வளவு தெரியுமா?

0

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் உட்பட நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐவர் இன்று தமது சொத்து மதிப்பை வெளியிட்டனர்.

ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நெஷனல் அமைப்பு நீண்டகாலமாக மேற்கொண்ட முயற்சியின் பலனாக இந்த சொத்து மதிப்பு வெளியிடல் இடம்பெற்றுள்ளது.

சுமந்திரனின் சொத்து மதிப்பு, நாடாளுமன்ற உறுப்பினருக்கு உரிய விிதமாகவோ, பிரபல சட்டத்தரணிக்குரிய விதமாகவோ அல்லாமல் ஓரளவு எளிமையான சொத்து விபரமாகவே உள்ளது.

வயல் நிலம், இரண்டு வீடுகள், 5 இலட்சம் ரூபா பெறுமதியான நகைகள், பிள்ளைகள் பெயரில் சிறிய வைப்பு, இதைவிட, ஹற்றன் நசனல் வங்கியில் 30இலட்சம் ரூபா கடன் என்ற தனது சொத்து விபரத்தை சுமந்திரன் வெளியிட்டுள்ளார்.

இவருடன் வாசுதேவ நாணயக்கார, தாரக பாலசூரிய,எரான் விக்ரமரத்ன, விதுர விக்கிரமநாயக்க ஆகிய ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது சொத்து விபரத்தை அறிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.