தமிழகத்தில் வகுப்பறையில் ஆசிரியை வெட்டிக்கொலை ! அதிர்ச்சி செய்தி ! நடந்தது என்ன ?

0

ஒரு தலைக் காதலால் பள்ளி வகுப்பறையிலேயே ஆசிரியை வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் இந்த சம்பவத்தினால் பதற்றம் நிலவுகிறது.

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் . இவரது மகள் ரம்யா தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார்.

ரம்யாவை குறிஞ்சிப்பாடி அருகே உள்ள விருட்சம்குப்பத்தைச் சேர்ந்த ராஜசேகர் ஒருதலையாக காதலித்து வந்துள்ளார்.

இந்நிலையில் ராஜசேகர், ரம்யாவின் வீட்டிற்கே சென்று பெண் கொடுங்கள் என்று கேட்டுள்ளார் . அதற்கு ரம்யாவின் தந்தை சுப்பிரமணியன் முடியாது என்று மறுத்து விட்டார்.

இதனால் ஆத்திரமடைந்த ராஜசேகர் இன்று பள்ளிக்கு வந்து வகுப்பறையில் அமர்ந்து இருந்த ரம்யாவை கத்தியால் சரமாரியாக வெட்டியுள்ளார்.

இதனால் ரம்யா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ரம்யாவின் உடலை கைப்பற்றிய பொலிஸார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் ராஜசேகரை பொலிஸார் கைது செய்வதற்காக தேடி வருகின்றனர் .

Leave A Reply

Your email address will not be published.