திமுக டூ தினகரன்! விசித்திர கூட்டணி – பாய்கிறது சிறுத்தை!

0

 திமுகவுடன் தோழமைக் கட்சியாக இருந்த விடுதலை சிறுத்தைகள், அக் கட்சியுடன் கூட்டணி வைக்காமல் வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும்,   மேலும் டிடிவி தினகரன் கட்சியுடன் கூட்டணி  பேசி முடிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் றெக்கை கட்டிப் பறக்கிறது.

திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகளை சேர்ப்பதற்கு, திமுகவின் மூத்த நிர்வாகிகளும், வட மாவட்ட நிர்வாகிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் என்று சில நாட்களாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வந்தன. 

 இந் நிலையில் திமுக கூட்டணியில் பாமகவுக்கு வாய்பில்லை என்று திருமாவளவன் தொடர்ந்து சொல்லி வந்தாலும், அதுகுறித்து திமுக தரப்பில் எந்த பதிலும்  அளிக்கப்பட வில்லை. 

 இதற்கிடையில் திருமாவின் மனசாட்சி என்று சொல்லப்படும் வன்னியரசு, அவரது ட்விட்டர் பக்கத்தில், திமுக கூட்டணி குறித்து கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். அதில் மற்றவர்களை மதிக்காமல், தன் வலிமை உணராமல் இருப்பவர்கள் கெட்டுத் தொலைவார்கள் என்று கருத்து தெரிவித்திருந்தார். 

இதேபோல்,  திருமாவளவனும் ஒரு தொலைக்காட்சிப் பேட்டியில், தேர்தலுக்குப் பிறகு  பாஜகவுடன் திமுக கூட்டணி வைக்காது என்று நான் உத்தரவாதம் தரமுடியாது என்று கூறியிருந்தார். 

இந்தப் பேட்டி ஸ்டாலின் தரப்புக்கு கடும் அதிருப்தியைக் கொடுத்ததாகவும், இவரது பேட்டியால் திமுகவுக்கு வாக்களிக்க சிறுபான்மையினர் தயக்கம் காட்டும் மனநிலைக்கு வருவார்கள் என்றும், உயிருள்ளவரை பாஜகவுடன் கூட்டணி வைக்கமாட்டேன் என்று அடிக்கடி சொல்லி வரும் டிடிவி தினகரன்  பக்கம் சிறுபானமையினர் வாக்குகள் சாய்ந்துவிடும் நிலை ஏற்படும் என்று திமுக தரப்பில் கருதினர். 

இந் நிலையில்,  திமுக கூட்டணியில் இருந்து வெளியேற திருமாவளவன் முடிவு செய்துவிட்டதாகவும், அதற்கு மாற்றாக டிடிவி தினகரன் அணியில் சேர்வதற்கு அவர்  தயாராகிவிட்டதாகவும் தற்போது நம்பத்தகுந்த வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.