தென்னாபிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி! வரலாற்று சாதனை படைத்த இலங்கை ! ஆசியாவுக்கு பெருமை சேர்த்த இலங்கை அணி

0

தென்னாபிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 8 விக்கட்டுக்களால் அபார வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளது .

தென்ஆப்பிரிக்கா – இலங்கை இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி போர்ட் எலிசபெத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது.

டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா பேட்டிங் தேர்வு செய்தது. இலங்கையின் நேர்த்தியான பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் தென்ஆப்பிரிக்கா 222 ரன்னில் சுருண்டது.

தொடக்க வீரர் மார்க்கிராம் 60 ரன்களும், விக்கெட் கீப்பர் டி காக் 86 ரன்களும் சேர்த்தனர். இலங்கை அணி சார்பில் பெர்னாண்டோ, ரஜிதா தலா மூன்று விக்கெட்டுக்கள் வீழ்த்தினர்.

பின்னர் இலங்கை முதல் இன்னிங்சில் விளையாடியது. நேற்றைய முதல் நாள் ஆட்ட முடிவில் இலங்கை 3 விக்கெட் இழப்பிற்கு 60 ரன்கள் எடுத்திருந்தது.

நேற்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. தென்ஆப்பிரிக்காவின் ரபாடா பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் இலங்கை 154 ரன்னில் சுருண்டது. விக்கெட் கீப்பர் டிக்வெல்லா தாக்குப்பிடித்து 42 ரன்கள் அடித்தார். ரபாடா 4 விக்கெட்டும், ஆலிவியர் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 68 ரன்கள் முன்னிலைப் பெற்றது. இந்த முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கியது. இலங்கையின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 2-வது இன்னிங்சிலும் தென்ஆப்பிரிக்கா மளமளவென விக்கெட்டுக்களை இழந்தது.

டு பிளிசிஸ்-ஐ தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க 128 ரன்னில் சுருண்டது தென்ஆப்பிரிக்கா. 8 பேர் ஒற்றையிலக்க ரன்னில் வெளியேறினார்கள். டு பிளிசிஸ் 50 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். லக்மல் 4 விக்கெட்டும், டி சில்வா 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

தென்ஆப்பிரிக்கா அணி ஒட்டுமொத்தமாக 196 ரன்கள் முன்னிலைப் பெற்றிருந்தது . இதனால் இலங்கை அணியின் வெற்றிக்கு 197 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது

இன்றையதினம் 8 விக்கெட்டுக்கள் கைவசம் இருக்க ஆட்டத்தை ஆரம்பித்த இலங்கை அணி குஷால் மெண்டிஸ் மற்றும் பெர்னாண்டோ ஆகியோரின் நிதானமான ஆட்டத்தினால் வெற்றி இலக்கை இலகுவாக அடைந்தது .

குஷால் மெண்டிஸ் 84 ஓட்டங்களையும், ஒஷாட பெர்னாண்டோ 75 ஓட்டங்களையும் பெற்று வெற்றியை பெற்று கொடுத்தார்கள் .

இந்த போட்டியின் சிறப்பு ஆட்ட நாயகனாக குஷால் மெண்டிஸ் தெரிவு செய்ப்பட்டார் .தொடரின் சிறப்பு ஆட்ட நாயகனாக குஷால் ஜெனித் பெரேரா தெரிவுசெய்யப்பட்டார்

இந்த டெஸ்டில் இலங்கை வெற்றி வெற்றி பெற்றதன் மூலம் , தென்ஆப்பிரிக்காவை 2-0 என ஒயிட்வாஷ் செய்து தென்ஆப்பிரிக்கா மண்ணில் டெஸ்ட் தொடரை வென்ற முதல் ஆசிய அணி என்ற சரித்திர சாதனையை படைத்துள்ளது ,.

Leave A Reply

Your email address will not be published.