நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டி – நடிகர் கமல்ஹாசன் அறிவிப்பு.!

0

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தனித்து போட்டியிடுமென அறிவித்துள்ளார் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன்.

நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்காக கூட்டணி முஸ்தீபுகளில் தீவிரமாக இயங்கிவருகின்றன நாடு முழுவதுமுள்ள அரசியல் கட்சிகள். தமிழகத்தை பொறுத்தமட்டில் திமுக தலைமையிலான அணியில் காங்கிரஸ், விசிக, மதிமுக, இடதுசாரிகள், இஸ்லாமிய கட்சிகள் ஆகியவை இடம்பெறுமென தெரிகிறது. அதேபோல், அதிமுக தலைமையிலான அணியில் பாஜக, புதிய தமிழகம், புரட்சி பாரதம் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெறுமென செய்திகள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில், எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை நாங்கள் தனித்தே எதிர்கொள்வோம் என அறிவித்துள்ளார் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்.

முன்னதாக, தினகரன் அணியைச் சார்ந்த தங்க.தமிழ்ச்செல்வன், தங்களோடு கூட்டணிக்கு வருமாறு கமல் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.