நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ? தமிழில் டுவிட் போட்டு வெற்றியைக் கொண்டாடிய வீரர் ! யார் தெரியுமா ?

0

தென்னாபிரிக்க அணிக்கு எதிராக முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி, குசல் ஜனித் பெரேராவின் ஆட்டத்தினால் வெற்றி பெற்றது.

இந்த வெற்றிக் களிப்பினை கொண்டாடும் முகமாக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் சர்வதேச கிரிக்கெட் வர்ணனையாளருமான ரஷல் ஆர்னோல்ட் தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழில் பதவிட்டுள்ளார்.

அவர் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளதாவது, “நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ? ஹாஹாஹா..,

டேய் மாமா, குசல் பெரேரா எப்படி வைச்சு செஞ்சான் பாத்தியா, அவங்க ஆளுங்க, அவங்க இடம், அவங்க பந்துவீச்சாளர், எங்களுக்கு பயம் இல்ல, அதுக்கு இதுதான் நல்ல உதாரணம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.