பாகிஸ்தானின் வருமானத்துக்கு செக் வைத்த அருண் ஜெட்லி.

0

காஷ்மீரில் புல்வாமாவில் துணை ராணுவ வீரர்கள் மீது தற்கொலை படை தீவிரவாதி நடத்திய தாக்குதலில் பாகிஸ்தானின் பங்கு இருப்பது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. புல்வாமா தீவிரவாத தாக்குதலுக்கு முதல் பதிலடியாக பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டு இருந்த மிகவும் ஆதரவான நாடு என்ற அந்தஸ்தை இந்தியா திரும்ப பெற்றது.

தற்போது பாகிஸ்தானின் அடிமடியில் இந்தியா கை வைத்துள்ளது. அங்கிருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கான சுங்க வரியை 200 சதவீதம் மத்திய அரசு அதிகரித்துள்ளது. இது உடனடியாக அமலுக்கு வருவதாக மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார்.

சுங்க வரி  அதிகரிகப்பட்டுள்ளதால் இந்திய இறக்குமதியாளர்கள் பாகிஸ்தானிலிருந்து பொருட்களை இறக்குமதி செய்யவதை விரும்ப மாட்டார்கள். இதனால் இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்ததன் வாயிலாக கிடைக்கும் வருவாய் பாகிஸ்தானுக்கு  இனி கிடைக்காது.

ஏற்கனவே போதிய நிதி இல்லாமல் தள்ளாடும் பாகிஸ்தான் பல நாடுகளில் கையெந்தி வருகிறது. இந்நிலையில் இந்தியா தற்போது பாகிஸ்தானின் வருமானத்துக்கு செக் வைத்துள்ளதால் அந்த நாடு பெரும் சிக்கலை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.