பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்த இந்தியா: க்கிரமிப்பு காஷ்மீரில் நுழைந்து விமானப்படை அதிரடி தாக்குதல்! 300 தீவிரவாதிகள் பலி!!

0

காஷ்மீர் மாநிலம் புல்வாமா பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் சி.ஆர்.பி.எஃப் அதிகாரிகள் 40 பேர் வீரமரணமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெயிஷ்-இ-முகம்மது என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என இந்தியா எச்சரித்திருந்தது. இராணுவ வீரர்களுக்கு முழு சுதந்திரம் அளிப்பதாக பிரதமர் மோடி கூறியிருந்தார்.

இந்நிலையில், இந்திய விமானப்படையை சேர்ந்த போர் விமானங்கள், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீரின் பால்கோட் பகுதியில் நுழைந்து தாக்குதல் நடத்தியுள்ளதாக விமானப்படை தகவல் தெரிவித்துள்ளது. 12 போர் விமானங்கள் பயங்கரவாதிகளின் முகாம் மீது தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 1000 கிலோ வெடி மருந்துகள் பயங்கரவாதிகள் முகாம் மீது வீசப்பட்டு அவை முற்றிலும் அழிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

விமானப்படையின் தாக்குதலில் 300 தீவிரவாதிகள் பலி என தகவல்!

காஷ்மீர் மாநிலம் புல்வாமா பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் சி.ஆர்.பி.எஃப் அதிகாரிகள் 40 பேர் வீரமரணமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய விமானப்படையை சேர்ந்த போர் விமானங்கள், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீரின் பால்கோட் பகுதியில் நுழைந்து தாக்குதல் நடத்தியுள்ளதாக விமானப்படை தகவல் தெரிவித்துள்ளது. 

மிராஜ் வகை போர் விமானங்கள் அதிகாலை 3:30 மணியளவில் பயங்கரவாதிகள் முகாம் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் 300 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய விமானப் படைக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் மீது அதிரடி தாக்குதல் நடத்திய வீரர்களுக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.

இந்த தாக்குதலை தொடர்ந்து, பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை கூடியுள்ளது. மத்திய அமைச்சர்கள் சுஷ்மா ஸ்வராஜ், ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன்,அருண் ஜெட்லி உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.