பாகிஸ்தான் உலக வரைபடத்திலிருந்து அழிக்கப்படவேண்டும்! சிவசேனா குமுறல்!

0

ஒட்டுமொத்த உலகுக்கே ஆபத்தான பாகிஸ்தான் மீதான தாக்குதலை இந்தியா தொடர வேண்டும் என்று சிவசேனா வலியுறுத்தியுள்ளது.

சிவசேனா கட்சியின் உத்தியோகபூர்வ பத்திரிகையான சாம்னாவில் வெளியான ஒரு செய்தியிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளதாக ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

உலக வரைபடத்தில் பாகிஸ்தான் துடைத்தெறியப்படும் வரை உலகம் முழுவதும் அமைதி என்பது இருக்காது.

பாகிஸ்தான் போன்ற நாடு இந்தியாவுக்கு மட்டும் அல்ல ஒட்டுமொத்த உலகத்திற்கும் ஆபத்தானது.

அங்கு தொடரும் பயங்கரவாதத்திற்கு முடிவு கட்டும் வரை, நமது நாட்டு இராணுவ வீரர்களின் நடவடிக்கையும் தொடர வேண்டும்.

பாகிஸ்தானின் மண்ணில் அல் கொய்தா தலைவரான ஒசாமா பின் லேடனை அமெரிக்கா சுட்டுக்கொன்றது.

அதே பாணியில் 40 துணை இராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு பழிவாங்கும் விதமாக ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பு தலைவர் மசூத் ஆசார் அழித்தொழிக்கப்பட வேண்டும்.

முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி 1971 ஆம் ஆண்டு இந்திய இராணுவத்தின் வலிமையை உலகத்துக்கு பறைசாற்றினார்.

பிரதமர் மோடி ஆட்சியில் இதேபோன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தாம் எதிர்பார்க்கிறோம் எனவும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.