பாரிய படுகொலைகள் நடந்த இலங்கையை தென்னாபிரிக்காவுடன் ஒப்பிட முடியாது! நவநீதம்பிள்ளை

0

இலங்கை அரசு, சர்வதேசத்திற்கு, நீதி மற்றும் பொறுப்புக்கூறல் வாக்குறுதிகளை அளித்து விட்டு, உண்மை நல்லிணக்க ஆணைக்குழுவை அமைப்பதற்கு அமைச்சரவையின் அனுமதி கோரியிருப்பது குறித்து முன்னாள் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை  அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் இலங்கை தொடர்பான அறிக்கை குறித்த விவாதத்துக்கு முன்னர், அரசின் இந்த நடவடிக்கை ஏமாற்றத்தை அளித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

30/1 தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதில் இருந்து தப்பித்துக் கொள்வதற்கு இலங்கை அரசு இன்னும் தாமதிக்கும் தந்திரத்தைக் கையாளுவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். 

தென்னாபிரிக்காவின் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவைப் போன்று, இலங்கையில் போரின்போது நடந்த குற்றங்கள் தொடர்பான உண்மையை வெளிப்படுத்தி, மன்னித்து மறந்து விட வேண்டும் என்று இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறியிருக்கின்றார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் செய்தியில், மிக முக்கியமான வாக்குறுதிகளான நீதி மற்றும் பொறுப்புக்கூறலைக் காணவில்லை என்றும் போருக்குப் பின்னர் நீதி, மற்றும் பொறுப்புக்கூறலுக்கு நடவடிக்கை எடுப்பதாக இலங்கை அரசு கூறியிருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

அதற்குப் பதிலாக, உண்மை நல்லிணக்க ஆணைக்குழுவுக்கு மாத்திரம் அமைச்சரவையிடம் அனுமதி கோரியிருப்பது அந்த வாக்குறுதியில் இருந்து பின்வாங்குவதைப் போல் தோன்றுவதாகவும் அவர் கூறினார். 
தென்னாபிரிக்காவின் உண்மை நல்லிணக்க ஆணைக்குழு பற்றிய தவறாக அர்த்தப்படுத்துவதாகவும் இது முற்றிலும் சரியான முறை என்று அர்த்தமில்லை. அந்தச் சூழலுக்கு அது பொருத்தமானதாக இருந்தது என்றும் நவநீதம் பிள்ளை கூறியுள்ளார். 

இலங்கையில் நடந்த பாரிய படுகொலைகள், காணாமல் ஆக்கப்படுதல்கள், கொடூரமான குற்றங்களுடன் தென்னாபிரிக்காவை ஒப்பிட முடியாது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

ReplyForward

Leave A Reply

Your email address will not be published.