பிரான்ஸிலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட ஈழத் தமிழர்கள் சிங்கள இராணுவத்தின் பிடியில்!

0


பிரான்ஸின் றீயுனியன் தீவிலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட 66 இலங்கையர்களை குற்றப் புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

66 இலங்கை அகதிகள் இன்று (வியாழக்கிழமை) நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ள நிலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 4 ஆம் திகதி 72 இலங்கையர்கள் பிரான்ஸ் தீவான றீயுனியன் தீவை சென்றடைந்தனர். அவ்வாறு சென்றடைந்தவர்களில் 66 பேர் நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

இதில் ஏனைய ஆறு பேருக்கும் பிரான்ஸ் புகலிடம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.