புலம்பெயர் நாடுகளிலுள்ள இளைஞர்களை குறிவைக்கும் கருணா? இலங்கைக்கு அழைத்துவரவும் முயற்சி!

0

புலம்பெயர் நாடுகளிலுள்ள பல இளைஞர்களை இலங்கைக்கு திரும்ப அழைக்கும் முயற்சியில் முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) தீவிரமாக இறங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

புலம்பெயர் நாடுகளிலுள்ள பல இளைஞர்கள் இலங்கைக்கு திரும்பி வர எதிர்பார்த்துள்ளதாக முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) தெரிவித்துள்ளார்.

இதற்கான ஆரம்ப கட்டமாக சமகாலத்தில் பல்வேறு புலம்பெயர் அமைப்புகளுடன் கலந்துரையாடல் மேற்கெண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதற்காக புலம்பெயர் தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு இடையில் சந்திப்பு ஒன்றை நடத்துவதற்கான முயற்சிகளை தான் மேற்கொண்டு வருவதாக கருணா மேலும் கூறியதாக ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.