போக்குவரத்து பொலிஸ் அதிகாரியை டிப்பெண்டர் வாகனத்தால் மோதி தள்ளிய அமைச்சரின் மகன் கைது!

0

பம்பலப்பிட்டியவில், பொரளை பொலிஸ் நிலைய ​​போக்குவரத்துப் பொலிஸ் பொறுப்பதிகாரி பயணித்த மோட்டார் சைக்கிளை மோதித்தள்ளிய டிப்பெண்டர் வாகனத்தில் இருந்தார் என்றக் குற்றச்சாட்டின் அடிப்படையில் அமைச்சர் ஒருவரின் புதல்வர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அலுத்கமகேயின் புதல்வரே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார்.

குறித்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பொரளை போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி சரத்சந்திரவின் இடுப்பு எலும்பு முறிந்து தீவிர தலைக்காயங்கள் மற்றும் உட்புற இரத்தப்போக்கு ஏற்பட்டுள்ள நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு செயற்கை சுவாசம் வழங்கப்பட்டுள்ளது என வைத்தியசாலை தகவல்கள் குறிப்பிடுகின்றன.

அதேவேளை ஐ.தே.க கொழும்பு மாநகரசபை உறுப்பினர் துமிந்த ஆர்ட்டிகல மற்றும் டிபெண்டரின் உரிமையாளர், டிபெண்டரை செலுத்திய பொலிஸ் அதிகாரியின் மகன் ஆகியோரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.