போதை பொருளை விட மக்கள் பிரதிநிதிகள் ஆபத்தானவர்கள்! மஹிந்த தேசப்பிரிய!

0

திட்டமிடப்பட்ட வகையில் குற்றங்களை புரிந்தவர்கள் மக்கள் பிரதிநிதிகளாக மாறுவதற்கு இடமளிக்கப்படுகின்றமை நிறுத்தப்பட வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

தற்போது நாட்டில் போதைப் பொருள் கடத்தல்கள் தொடர்பில் அதிகம் பேசப்படுகிறது. என்றாலும் அது நாட்டின் முக்கிய பிரச்சினை இல்லை.

திட்டமிட்ட குற்றங்களை புரிகின்றவர்கள் தேர்தல்களில் நின்று மக்கள் பிரதிநிதிகளாக மாறுவதற்கான வாய்ப்பு இருக்கின்றமையே நாட்டின் முதலாவது பிரச்சினையாகும் என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.