போர்மேகம் சூழ்ந்தது ! இரவு பகலாக 140 போர் விமானங்களுடன் போர் ஒத்திகை ஆரம்பம்? ! பீதியில் அயல் நாடுகள்

0

புல்வாமா தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா முனைப்புக் காட்டுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

40 போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் ஏவுகணைகளைப் பயன்படுத்தி இந்திய விமானப்படை இரவு-பகலாக மிகப்பெரிய போர் ஒத்திகையினை நடத்துவதாக கூறப்படுகிறது.

‘வாயு சக்தி’ என்ற பெயரில் இந்திய விமானப்படை பிரமாண்டமான போர் ஒத்திகையை நடத்தி இருக்கிறது.

ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் நேற்று முன்தினம் பகலில் தொடங்கி இரவையும் கடந்து விடிய, விடிய நடந்த இந்த ஒத்திகையில் 140 போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் நவீன ஏவுகணைகள் என அதிகமான தளவாடங்கள் பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

விமானப்படையின் ’குண்டூசி முனையளவு துல்லிய’ திறனை பறைசாற்றும் விதமாக இந்த ஒத்திகை நடந்ததாக விமானப்படை வட்டாரத் தகவல்கள் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.