‘போர் வேண்டாம்’: இணையத்தில் டிரெண்டாகும் #SayNoToWar ஹாஷ்டாக்

0

indianairforce
Image captionசித்தரிப்புக்காக.

டிவிட்டரில் போர் வேண்டாம் #SayNoToWar என்ற ஹாஷ்டாக் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இருநாடுகளிலும் டிரெண்டாகி வருகிறது.

மாலை 4.30 மணி நேர நிலவரப்படி இந்தியாவில் இந்த ஹாஷ்டேக் இரண்டாம் இடத்திலும், பாகிஸ்தானில் இந்த ஹாஷ்டேக் நான்காம் இடத்திலும் உள்ளது.

Trends

‘அணு விதைத்த பூமியிலே அறுவடைக்கும் அணு கதிர்தான்’ என்ற பாடலை #SayNoToWar என்ற ஹாஷ்டாகுடன் புஹாரிராஜா பகிர்ந்துள்ளார்.

டுவிட்டர் இவரது பதிவு @buhariraja: அணு விதைத்த பூமியிலேஅறுவடைக்கும் அணுகதிர் தான்பேராசை கடல் பொங்கி விட்டால் தங்குமிடம் இல்லைபுது வீடெதுவும் பால் வெளியில் இன்றுவரை இல்லைபோர் செல்லும் வீரன் ஒரு தாய் மகன் தான்நம்மில் யார் இறந்தாலும் ஒரு தாய் அழுவாள் பாரடாகருவரையும் வீடல்ல கடல் சூழலதும் உனதல்ல#SayNotoWar

பாகிஸ்தானில் இந்த ஹாஷ்டாகில் கருத்து பகிர்ந்திருக்கும் ஜான்ஜைப், “போர் ஒரு வாய்ப்பு அல்ல. நாம் புத்திசாலித்தனமாக செயல்பட வேண்டும். கைது செய்யப்பட்ட விமானி கண்ணியம் மற்றும் மரியாதையுடன் நடத்தப்பட வேண்டும். மனிதநேயத்தை மறக்க வேண்டாம். அவர் யாரோ ஒருவரின் கணவர், ஒருவரின் தந்தை” என கருத்து பகிர்ந்திருக்கிறார்.

முகநூலில் ராமமூர்த்தி என்னும் பதிவரால் எழுதப்பட்ட, போர்க் காலத்தின் நிலைமைகளைக் கண்முன் காட்டும் ஒரு கவிதை.

டுவிட்டர் இவரது பதிவு @Jhanzai40445986: Waar is not an option We must act wisely Pilot should be treated with dignity and respect.. He was a sldr following order.. He may be a father a son and husband of someone Let's not forget humanity #saynotowar

போர் அனைத்தையும் அழித்துவிடும். அதனை அனைத்து தரப்பும் புரிந்து கொள்ள வேண்டும் என்ற தொனியில் கருத்து பகிர்ந்திருக்கிறார் உமர் சையத்.

டுவிட்டர் இவரது பதிவு @omersaeed2012: #SayNoToWar people who celebrated yesterday and who are celebrating today need to know that war destroys everything , so please calm down and help in de escalating  current situation.

வாசிஃப், “போர் எந்த தரப்புக்கும் தீர்வை தராது. இருதரப்பு குடும்பங்களும் பாதிக்கப்படும். பாகிஸ்தான் அமைதியை விரும்பும் நாடு” என்ற தொனியில் டிவிட்டர் கருத்து பகிர்ந்துள்ளார்.

போர் வேண்டாம்
டுவிட்டர் இவரது பதிவு @aqwasif16: "Better sense should prevail"War is never a solution. Families will suffer on both ends. Pakistan is a peace loving nation. India should also come out of its war hysteria and let peace prevail.#SayNoToWar

ஹரோன், “போரை கொண்டாடுபவர்கள் போரில் கலந்துகொள்வதில்லை. போரில் பங்குபெறுபவர்கள் அதனை கொண்டாடுவதில்லை.” என கருத்து பகிர்ந்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.