மனைவிக்கு கோயில் கட்டி தினமும் வணங்கி வரும் கணவன் ! நவீன ஷாஜகான் ! இதுவல்லவா காதல் ஆஹா அற்புதம்

0

48 ஆண்டுகால காதல் மனைவிக்கு கோயில் கட்டி தினமும் வணங்கி வருகிறார் கணவர் ஒருவர். இச்சம்பவம் புதுக்கோட்டை மாவட்டத்தில் பதிவாகியுள்ளது.

புதுக்கோட்டை உசிலங்குளம் பகுதியைச் சேர்ந்த சுப்பையா என்பவர் பிஎஸ்என்எல் மேற்பார்வையாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

செண்பகவல்லை என்பவரை சுப்பையா கடந்த 1958 ஆம் ஆண்டு காதலித்து, இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்.

கடந்த 2006 ஆம் ஆண்டு செண்பகவல்லி உடல்நலக்குறைவால் உயிரிழந்துவிட்டார்.

இந்த நிலையில் பிள்ளைகளை திருமணம் செய்து வைத்துவிட்டதால் தனிமையில் வசித்து வந்த சுப்பையாவுக்கு மனைவி இல்லாத தனிமை வாட்டியது.

இதை தொடர்ந்து 3 லட்ச ரூபாய் செலவில் தனது மனைவி செண்பகவல்லிக்கு 3.5 அடியில் ஐம்பொனில் திருவுருவ சிலையை செய்து தனது வீட்டில் வைத்துள்ளார்.

காதல் மனைவிக்கு கோயில் கட்டிய சுப்பையா இந்த உலகில் வாழ்ந்து வரும் ஒரு ஷாஜகான் என்கின்றனர் பலர்.

Leave A Reply

Your email address will not be published.