மனைவி மற்றும் மகனை உயிருடன் எரித்துக்கொலை செய்த கணவன் ! நடந்தது என்ன ?

0

தற்கொலைக்கு முயன்ற காதல் மனைவி மற்றும் மகனை உயிருடன் எரித்துக்கொலை செய்த தந்தையின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த ரமேஷ் (34) என்பவர், சுசித்ரா (28) என்ற பெண்ணை காதலித்து வந்த நிலையில் இருவரும் வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் வீட்டில் பலத்த எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஆனால் அதனையும் மீறி 2015ம் ஆண்டு கலப்புத் திருமணம் செய்துகொண்ட தம்பதி, ஐதராபாத்தில் குடியேறினர்.

இந்த நிலையில் கடந்த 8 மாதங்களாகவே கருத்து வேறுபாடு காரணமாக தாயின் வீட்டில் இருந்த சுசித்ரா, கணவரின் அழைப்பை ஏற்று சமாதானம் பேச தன்னுடைய 4 மாத குழந்தையை தூக்கி சென்றுள்ளார்.

இருவரும் பேசிக்கொண்டிருந்த சில நிமிடங்களில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனால் மனமுடைந்த சுசித்ரா, மயக்க மாத்திரை சாப்பிட்டதோடு, பாலில் கலந்து குழந்தைக்கும் கொடுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

ஆனால் இவை அனைத்தையும் பார்த்துக்கொண்டிருந்த ரமேஷ், தடுக்காமல் அவர்கள் இருவரும் பைக்கில் ஏற்றிக்கொண்டு ஒரு பரந்த நிலப்பரப்பிற்கு சென்றுள்ளார்.

அங்கு மயக்க நிலையில் இருந்த சுசித்ராவின் தலையில் கட்டையால் அடித்துவிட்டு, இருவரையும் பெட்ரோல் ஊற்றி உயிருடன் எரித்து கொலை செய்துள்ளார்.

இந்த சம்பவமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனைத் தொடர்ந்து குற்றவாளி பொலிசாரினால் சிறைபிடிக்கப்பட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.