மன்னார் புதைகுழி காபன் அறிக்கை வெளியிடுவதில் தாமதம்!

0

இன்று (20) புதன்கிழமை வெளிவரும் என எதிர்பார்க்கப்பட்ட மன்னார் மனிதப் புதைகுழியின் காபன் பரிசோதனைக்கான அறிக்கை இன்னமும் வெளியிடப்படவில்லை.

மன்னார் நீதவான் நீதிமன்றத்தினூடாக இன்று காபன் பரிசோதனைக்கான அறிக்கை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என கூறப்பட்டிருந்தது.

எனினும் குறித்த அறிக்கை நீதிமன்றத்துக்கு கிடைக்காத நிலையில், றிக்கையை வெளியிட முடியாது எனவும், பீட்டா நிறுவனத்தில் இருந்து மன்னார் நீதிமன்றத்துக்கு உத்தியோகபூர்வமாக அறிக்கை கிடைத்தவுடன் வெளியிட முடியும் என மன்னார் நீதவான் ரீ.சரவணராஜா இன்று புதன்கிழமை (20) தெரிவித்தார்.

மன்னார் மனித எச்சங்களின் காபன் பரிசோதனை அறிக்கையை கடந்த 16 ஆம் திகதி அகழ்வு பணிக்கு பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ பீட்டா இணையத்தளத்தினூடாகப் பெற்றுக் கொண்டுள்ளார்.

சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ ஒரு விண்ணப்பதாரி என்பதால் பரிசோதனைக்கான அறிக்கையை பெற்றுள்ளதாகவும், அறிக்கையினை உத்தியோகபூர்வமான அறிக்கையாக மன்னார் நீதிமன்றம் கருதவில்லை எனவும், அறிக்கை மன்னார் நீதிமன்றத்துக்கு நேரடியாக அனுப்பி வைக்கப்பட்டவுடன் அது தொடர்பில் நீதிமன்றத்தினால் அறிவிக்கப்படும் என நீதவான் தெரிவித்ததாக காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் சார்பாக மன்றில் ஆஜரான சட்டத்தரணி வி.எஸ்.நிரஞ்சன் தெரிவித்தார்.

மேலும் குறித்த பகுதியில் நடைபெறும் அகழ்வுப்பணிகளை மன்னார் நீதவான் நேரடியாக சென்று பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.