மாலியிலிருந்து இலங்கை வந்தடைந்த இலங்கை இராணுவத்தினரின் சடலங்கள்! படங்கள் உள்ளே

0

மேற்கு ஆபிரிக்க நாடான மாலியில் கண்ணிவெடித் தாக்குதலில் உயிரிழந்த இரண்டு இலங்கை இராணுவ அதிகாரிகளினதும் சடலங்கள் நேற்று(04) பிற்பகல் இலங்கைக்கு எடுத்து வரப்பட்டுள்ளன.

மேஜர் ஜெயவிக்ரம,சார்ஜன்ட் விஜேகுமார ஆகிய இரண்டு அதிகாரிகளின் சடலங்களை ஏற்றிய சிறப்பு விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேற்று பிற்பகல் தரையிறங்கியது.

இதனையடுத்து மாலி ஐ.நா அமைதிப்படையின் தளபதி, லெப்.ஜெனரல் டெனிஸ் கிலெஸ்போர் ஐ.நா கொடியினால் போர்த்தப்பட்ட சடலங்கள் அடங்கிய பெட்டிகளை இராணுவத் தளபதியிடம் கையளித்தார்.

இதேவேளை,குறித்த நிகழ்வில் இலங்கைக்கான ஐ.நா பிரதிநிதி ஹனா சிங்கர், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்த்தன மற்றும் படைத் தளபதிகள், அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.