முக்கிய இயக்குனரின் படத்தில் இணைந்த விக்ரம்! சூப்பர் காம்பினேஷன்

0

விக்ரம் சினிமாவில் தரமான படங்களில் மட்டும் நடிப்பவர். கடின உழைப்புடன் தோற்றத்தை மாற்றி அவர் நடித்த பல படங்கள் இன்னும் சினிமா ரசிகர்களின் கண்களுக்கு வியப்பாக தான் தெரியும்.

கடைசியாக அவருக்கு சாமி 2 படம் வெளியானது. தற்போது அவர் கடாரம் கொண்டான், துருவ நட்சத்திரம் படங்களை கையில் வைத்துள்ளார். அத்துடன் பிரம்மாண்ட பட்ஜெட் படமான மஹாவீர் கர்ணா படமும் இருக்கிறது.

இந்நிலையில் அவர் இமைக்கா நொடிகள் படத்தை இயக்கி வெற்றி பெற்ற அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அடுத்ததாக நடிக்கவுள்ளாராம். இப்படத்திற்கான ஸ்கிரிப்ட் வேகமாக தயாராகி வருகிறதாம்.

ஏப்ரலில் இதுகுறித்த முறையான அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.