மைத்திரி – மஹிந்த சந்திப்பில் புதிய அதிரடி தீர்மானம்!

0

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், முன்னாள் ஜனாதிபதியும் எதிர்க் கட்சித் தலைவருமாகிய மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற முக்கிய சந்திப்பில் புதிய கூட்டணி பற்றி முடிவு எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கும் இடையிலான புதிய கூட்டணி இன்னும் ஒரு மாத காலத்துக்குள் அமைக்க முடியுமாக இருக்கும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அடிப்படைக் கொள்கைகள் தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்கு மூன்று பிரதான அம்சங்கள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளன. இதற்காக ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளது.

மேலும் கூட்டணியின் பெயர், சின்னம் என்பன தொடர்பில் இதுவரை எந்த தீர்மானமும் இல்லை. அடுத்த கட்டமாக அது குறித்து கவனம் செலுத்தப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இந்த தகவல்களை ஸ்ரீ ல.சு.க.யின் சிரேஷ்ட உறுப்பினரும் பாராளுமன்ற உறுப்பினருமான எஸ்.பீ. திஸாநாயக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.