யாழில் அதிகாலை நடந்த திகில்! தொலைபேசிகளைவைத்து திருடர்களை மடக்கிய புத்திசாலி மக்கள்!!

0

யாழ்ப்பாணம் தென்மராட்சியில் வீடு புகுந்து கொள்ளையிட்ட மூன்று திருடர்கள் ஊர் மக்களிடம் வசமாகச் சிக்கிய சம்பவம் பதிவாகியுள்ளது.

வரணி இயற்றாலைப் பகுதியிலேயே இந்தச் சம்பவம் நேற்றைய தினம் பதிவாகியுள்ளது.

இதுகுறித்து மேலும் தெரியவருவதாவது,

முகத்தை மூடிக் கட்டிய மூன்று இளைஞர்கள் வரணி இயற்றாலைப் பகுதியிலுள்ள வீடு ஒன்றினுள் கொள்ளையிடுவதற்காகப் புகுந்துள்ளனர். அதன்போது அங்கு என்னென்ன பொருட்கள் இருக்கின்றன என வீட்டுக்காரரிடம் கேட்டு தாக்குதல் மேற்கொண்டனர்.

வீட்டுக் காரரிடமிருந்து உரிய பதில் கிடைக்காததன்காரணமாக தாமே சல்லடைபோட்டுத் தேடி தங்க நகைகளையும் பெருந்தொகைப் பணத்தையும் கொள்ளையிட்டுள்ளனர்.

இதேவேளை குறித்த வீட்டில் வழமைக்கு மாறான சலசலப்பை உணர்ந்த அயல்வீட்டு மக்கள் கொள்ளைச் சம்பவம் நடப்பதை புரிந்துகொண்டுள்ளனர்.

இதனையடுத்து ஊரிலுள்ள அனைவருக்கும் வேகமாக தொலைபேசி அழைப்புக்கள் எடுத்து நிலைமையினைக் கூறியதுடன் ஒன்றாக அணிதிரண்டு குறித்த வீட்டை சுற்றிவளைத்து முற்றுகையிட்டனர்.

இதன்போது கொள்ளையர்கள் தாம் சுற்றிவளைக்கப்படிருக்கிறோம் என்பதை அறியாது வீட்டைவிட்டு வெளியேறும்போது அயலவர்களிடம் வசமாக மாட்டுப்பட்டனர். இருப்பினும் ஒருவர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.

இரண்டு கொளையர்களையும் பிடித்த ஊர் மக்கள் அவர்கள்மீது உரிய கவனிப்பை மேற்கொண்டதுடன் சாவகச்சேரி பொலிஸாரிடம் தகவல் கொடுத்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் குறித்த இருவரையும் கைதுசெய்து விசாரித்துவருவதுடன் தப்பி ஓடியவரைக் கைதுசெய்வதற்கான முனைப்பில் இறங்கியுள்ளனர்.

இதேவேளை தப்பிச் சென்றவர் மானிப்பாய் பகுதியைச் சேர்ந்தவர் என்றும் இவர் இவ்விரண்டு சங்கிலி, காப்பு, மோதிரம் என்பவற்றையும் ஐம்பதாயிரம்ரூபா பணத்தையும் தன்னுடன் கொண்டு சென்றுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

கைதுசெய்யப்பட்ட சந்தேகிகள் இருவரும் நாவற்குழியினைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் கூறியுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.