யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கடமையின் போது தகாத உறவில் ஈடுபட்ட தாதிய உத்தியோகத்தர்கள் !

0

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை விபத்து அவசர சிகிச்சைப் பிரிவில் கடமையாற்றும் தாதிய
உத்தியோகத்தர்கள் இருவர் கடமையின்
போது தகாத உறவில் ஈடுபட்டனர் என்று வழங்கப்பட்ட
முறைப்பாட்டின் அடிப்படையில் அவர்கள் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளனர் என்று வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

விபத்து அவசர சிகிச்சைப் பிரிவில் நோயாளி ஒருவர் ஆபத்தான நிலையில்
அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தமது கடமையைப் புறந்தள்ளி மூத்த நிலைஆண் தாதிய
உத்தியோரும் இளநிலை பெண் தாதிய உத்தியோகத்தரும் தகாத உறவில் ஈடுபட்ட நிலையில்
மருத்துவர் ஒருவரால் நேரடியாகக் கண்டறியப்பட்டு வழங்கப்பட்ட முறைப்பாட்டின்
அடிப்படையிலேயே இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்தச் சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை இரவுக் கடமையின் போது இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் விபத்து அவசர சிகிச்சைப் பிரிவில் ஆபத்தான நிலையில்
சேர்க்கப்பட்ட நோயாளி ஒருவர் சேர்க்கப்பட்டிருந்தார்.

அந்த நோயாளியின் நிலமை கடுமையாக
இருந்த நிலையில் தாதிய உத்தியோகத்தர் ஒருவரே கடமையில் இருந்துள்ளார். ஏனையோர் கடமை
நேரத்தில் காணவில்லை என்று மருத்துவரால் தேடப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் அந்த பிரிவின் அறை ஒன்றை மருத்துவர் திறந்த போது, ஆண் தாதிய
உத்தியோகத்தர் ஒருவரும் பெண் தாதிய உத்தியோகத்தர் ஒருவரும் தகாத உறவில் ஈடுபட்டதனைக்
கண்டு அதிர்ச்சியடைந்தார்.

உடனடியாகவே அவர்களை தனது அலைபேசியில் ஒளிப்பதிவு செய்த மருத்துவர், சம்பவம் தொடர்பில் வைத்தியசாலைப் பணிப்பாளருக்கு அறிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.