விடுதலைப் புலிகளிடம் தோற்றுப்போன இந்திய வீரம்!

0

அண்மைய நாட்களில் இந்தியா மாபெரும் போர் ஒன்றை நடத்தியதைப் போலவும் இந்தியா என்பது என்னவோ வீர நாடு போலவும் கதைகள் கட்டப்பட்டிருந்தன. அண்மையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 இந்திய இராணுவத்தினர் கொல்லப்பட்டிருந்தனர். தற்போது இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீர் மாநிலத்தில் இந்தத் தாக்குதல் நடைபெற்றிருந்தது.

இந்திய படை பிரபாகரன் க்கான பட முடிவு


இதனையடுத்து, இந்தியாவின் போர் விமானங்கள் பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் தாக்குதலை நடாத்தியதாகவும் அதில் 300 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் இந்தியா கூறியது. அத்துடன் இந்தியப் பிரதமர் மோடி இந்த தாக்குதலை முன்னின்று வழிநடத்தியாகவும் விடிய விடிய கண் முழித்து இராணுவ அதிகாரிகளுடன் நின்று தாக்குதலை அவதானித்ததாகவும் சொல்லப்பட்டது.

ஆனால், தற்போது இந்திய விமானப்படை வீரரான அபி நந்தன் என்பவர் பாகிஸ்தான் இராணுவத்தினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. அத்துடன் தீவிரவாதிகள் கையகப்படுத்திய அபி நந்தன் தற்போது பாகிஸ்தான் இராணுவத்திடம் பாதுகாப்பாக உள்ளதாக வீடியே ஒன்றின் மூலம் அறிவித்திருப்பதும் யாவரும் அறிந்தது.

இந்திய படை பிரபாகரன் க்கான பட முடிவு

எவ்வாறெனினும், ஆசியாவில் ஏற்பட்டுள்ள இந்த சூழல் ஈழத் தமிழர்களின் வாழ்விலும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்த கூடும். அது இலங்கை அரசியலிலும் மாற்றங்களையும் சலசலப்புக்களையும் ஏற்படுத்தக்கூடும். ஈழத் தமிழர்கள் பாகிஸ்தான் நாட்டு அராஜகங்களை ஒருபோதும் ஏற்றுக் கொண்டவர்களில்லை. அதைப்போல இந்திய அராஜகங்களும் அதற்கு சற்றும் குறைவானதல்ல.

ஆனால் இந்தியா வீரத்தை காட்டுவதாக இப்போது சொல்வது வேடிக்கையானது. இணையத்தள சமூகத்திடம் இந்தியாவின் இந்தப் போர் குறித்த செய்திகள் பெரும் சிரிப்புக்கு உள்ளாகியுள்ளது. இந்தியா அரசியல் ரீதியாக தோற்றுப்போன ஒரு நாடு. இன்றும் இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி ஒரு நகைச்சுவை நடிகனாக – கோமாளியாக உலகில் வலம் வருகிறார்.

இந்திய படை பிரபாகரன் க்கான பட முடிவு

இந்தியாவின் போர் சாதனை பற்றிய பீற்றல்களில், நீங்கள் விடுதலைப் புலிகளிடம் தோற்றுவிட்டு ஓடி வந்தவர்கள் தானே என்று இணையவாசிகள் கிண்டல் செய்கின்றனர். ஈழத்திறகு வந்த இந்திய இராணுவம் எத்தனையோ அராஜகங்களை செய்துள்ளது. தமிழ் ஈழ மக்களை இன அழிப்பு செய்வதில் மிகவும் ஆர்வத்துடன் இந்திய இராணுவம் செயற்பட்டது.

இந்திய படை பிரபாகரன் க்கான பட முடிவு

தமிழீழ விடுதலைப் புலிகளை வேருடன் அழிப்போம் என்று சொல்லிக் கொண்டு காடுகளை சுற்றி வளைத்தனர் இந்திய இராணுவத்தினர். இலங்கை இராணுவத்தால்கூட இந்திய இராணுவத்தை எதிர்கொள்ள முடியவில்லை. ஈற்றில் விடுதலைப் புலிகள் கொடுத்த அடியில் இந்திய இராணுவம் வழிதெரியாது ஓடித் தப்பியது வரலாறு.

தற்போது இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் முறுகல் ஏற்பட்டுள்ள இந்த சந்தர்பத்தில், இலங்கை மீது மாத்திரமல்ல, இந்தியா பாகிஸ்தான் முதலிய நாடுகள் மீதான நமது எதிர்ப்பு குறையக்கூடாது. எந்த நாடுகள் போரை தொடுத்தாலும் அது அழிவுக்கு வழிவகுப்பதே. இந்த நாடுகள் அனைத்தும்தான் ஈழ மக்களை முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை செய்தன என்பதை மறக்காமல் இந்த சூழலை எதிர்கொள்வோம்.


ஆசிரியர், ஈழம்நியுஸ். 27.02.2019

Leave A Reply

Your email address will not be published.