விடுதலைப் புலிகளின் பலவீனம் பற்றி தலைவர் பிரபாகரன் என்ன கூறினார் தெரியுமா?

0

விடுதலைப் புலிகளின் ‘பலம்’ ‘பலவீனம்’ பற்றி ஒரு சந்தரப்பத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்கள் தெரிவத்த கருத்து மிகவும் முக்கியமான ஒன்று.

பிரபல ஊடகவியலாளர் அனிதா பிரதாபிற்கு தலைவர் பிரபாகரன் வழங்கிய செவ்வியிலேயே அவர் அதனைத் தெரிவித்திருந்தார்.

இந்தியப் படை இலங்கையைவிட்டு வெளியேறியதன் பின்னர், டைமஸ் சஞ்சிகையின் நிருபர் அனிதா பிரதாபிற்கு, புலிகளின் தலைவர் பிரபாகரன் வழங்கியிருந்த செவ்வி அக்காலத்திலும் சரி, இப்பொழுதும் சரி மிகவும் பிரபலமான ஒன்று.

அனிதா பிரதாப் இந்தியாவின் பிரபல பெண் ஊடகவியலாளர்.

இலங்கையின் யுத்தங்கள், அரசியல் உள்விவகாரங்கள், அப்கானிஸ்தான் யுத்த நிலவரங்கள் – என்று கமுனைக்குச் சென்று செய்தி சேகரித்த ஒரு துனிகரமாக ஊடகவியலாளர். மிகவும் பிரபல்யமான ‘த ஐலன்ட ஒப் பிளட்’ (The Island of Blood )என்ற நூலை அனிதா பிரதாப் எழுதியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

அனிதா பிரதாப் முல்லைத் தீவிலுள்ள விடுதலைப்புலிகளின் தளம் ஒன்றிற்குச் சென்று புலிகளின் தலைவரைச் சந்தித்து இந்தச் செவ்வியை பதிவுசெய்திருந்தார்.

1990ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 8ம் திகதி புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்கள் வழங்கிய அந்தச் செவ்வி பிரசுரமாகியிருந்தது.

அந்தச் செவ்வி இதுதூன்:

கேள்வி: எதற்காக இந்தியாவுடன் சண்டைபிடித்தீர்கள்?

பதில்: தமிழர்களைக் காப்பாற்றவென்று கூறிக்கொண்டு இந்தியா இலங்கைப் பிரச்சினையில் தலையிட்டது. ஆனால் எங்களின் பிரச்சனைகளை சரியானபடி அடையாளம் கண்டு தீர்க்கும்படியான எந்த ஒரு நடவடிக்கையிலும் இந்தியா ஈடுபடவில்லை. இலங்கையின் இனப்பிரச்சனையை மேலும் அதிகரிக்கவே இந்தியா தலைப்பட்டது. இலங்கையை தனது கட்டுப்பாட்டுள்குள் வைத்திருக்கும் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டே, தமிழ் இயக்கங்களை இந்தியா வளர்த்தது. இதில் என்னால் மன்னிக்முடியாத விடயம் என்னவென்றால், தமிழருக்கு உதவவென்று வந்த இந்தியா அந்தத் தமிழர் மீதே ஒரு யுத்தத்தை தினித்திருந்ததை. இந்தியா யுத்தத்தை ஆரம்பித்து மூன்றாவது நாள் இந்தியாவை நோக்கி ஒரு வேண்டுகோளை முன்வைத்திருந்தேன். அனியாயமாக அப்பாவிகள் கொல்லப்படுவதைத் தவிர்க்கும்படியும், சண்டைகளை நிறுத்தும்படியும் நான் வேண்டுகொள் விடுத்திருந்தேன். ஆனால் அதனை எங்களது பலவீனமாக நினைத்த இந்தியா, எங்கள் மீதான யுத்தத்தை மேலும் வேகப்படுத்தியிருந்தது. எங்களை ஒழித்துக்கட்டிவிடலாம் என்று நினைத்து இந்தியா இதனைச் செய்திருந்தது.

கேள்வி: இந்தியா ஆரம்பம் முதலே தொடர்ச்சியாக ஒன்றினைந்த இலங்கை என்கின்ற அடிப்படையிலேதானே நிலைப்பாடு எடுத்து வந்தது?

பதில்: சர்வதேசத்தை சமாளிக்கும் நோக்குடன் இந்தியா தன்னை இலங்கையின் ஒரு பாதுகாவலனாக அடையாளப்படுத்த முனைகின்றது. இப்படிச் செய்வதன்மூலம், வேறு சக்திகளை இலங்கையை நெருங்கவிடாது தடுக்க முனைகின்றது.

கேள்வி: இந்தியா தனது சொந்த நலனை அடிப்படையாகக் கொண்டே இலங்கைப் பிரச்சனையில் தலையிட்டது என்பதை நீங்கள் அறிவீர்கள், அப்படியிருக்க பயிற்சிகள், ஆயுதங்கள் என்று இந்தியாவையும் நீங்கள் உங்கள் நலனுக்குப் பயன்படுத்தியிருந்தீர்கள்தானே?

பதில்: ஆம். நாங்களும் இந்தியாவைப் பயன்படுத்தியிருந்தோம். இந்தியாவின் உள்நோக்கத்தையும், திட்டத்தையும் நாங்கள் நன்கு அறிந்திருந்தோம். அதேவேளை இரானுவ ரீதியாக எங்களைப் பலப்படுத்திக்கொள்ள இச்சந்தர்ப்பத்தை நாங்கள் பயன்படுத்திக்கொண்டோம்.

கேள்வி: உலகின் மூன்றாவது பெரிய இராணுவத்துடன் யுத்தம் புரியும் உற்சாகத்தை நீங்கள் எப்படிப் பெற்றீர்கள்?

பதில்: சிறிலங்காப் படையினரால் கைதுசெய்யப்பட்டிருந்த எங்களது பன்னிரெண்டு பிராந்தியத் தளபதிகளை விடுவிக்க இந்தியா தவறியிருந்தது. ஆவர்களது தற்கொலை, இந்தியாவுடன் யுத்தம்புரியவேண்டும் என்ற எண்ணத்தை எனக்கு ஏற்படுத்தியது. எனது சிரேஷ்ட தளபதிகள் சிலர் இந்தியாவுடன் சண்டையிடுவது பற்றி எனக்கு எச்சரிக்கைகளை தெரிவித்தார்கள். இந்தியாவுடன் நீண்ட காலத்திற்கு சண்டையிட்டுத் தாக்குப் பிடிக்கமுடியாது என்றும் அவர்கள் என்னை எச்சரித்திருந்தார்கள். ஆவர்களுக்கு நான் வியட்னாமை உதாரணம் காண்பித்தேன். திடமும், உறுதியும், அர்பணிப்பும் இருந்தால் ஒரு ஒரு சிறிய தேசத்தால் ஒரு வல்லரசைக் கூட எதிர்த்து வெற்றிபெறமுடியும் என்கின்ற உண்மையை நான் அவர்களுக்கு விளக்கினேன். நான் இந்தியாவுடன் சண்டையை ஆரம்பித்தபோது அங்கே, வெற்றி பற்றியோ அல்லது தோல்வி பற்றியோ நான் நினைத்துப் பார்க்கவில்லை. சண்டையிடும் திரானி எமக்கு இருக்கின்றதா என்பதுபற்றித்தான் யோசித்தேன். தோற்றுவிடுவோம் என்கின்ற அச்சத்தில் மக்கள் அவர்களுடைய குறிக்கோளையும், உரிமைகளையும் விட்டுவிடமுடியாது.

கேள்வி: இந்த விடயத்தில் இந்தியா ஏதாவது பாடத்தைக் பெற்றுக்கொண்டதா?

பதில்: எத்தனை பலம் இருந்தாலும், மக்களது விருப்புக்கு மாறாக எதனையும் அவர்களுக்கு திணித்துவிடமுடியாது என்கின்ற உண்மையை இந்தியா புரிந்துகொண்டுள்ளது.

கேள்வி: எப்படியான கெரில்லா பாணி உங்களுக்கு அதிகம் உபயோகமானதாக இருந்தது?

பதில்: நிலக்கன்னி வெடிகளை நாங்கள் அதிகமாக உபயோகித்திருந்தோம். இந்தியப் படையினருக்கு அது அதிக சேதத்தை ஏற்படுத்தியிருந்தது.

கேள்வி: இந்திய இராணுவத்தைப் பொறுத்தவரையில் அதன் பிரதான பலமும், பலவீனமும் எது என்று நீங்கள் கருதுகின்றீர்கள்?

பதில்: அதிகமான ஆளணியே இந்தியப் படையின் பிரதான பலம். அதேவேளை அதன் பலவீனமும் அது என்றுதான் நான் கூறுவேன்.

இந்தியப் படையின் பிரமாண்டமான ஆளணிப் பலமானது எங்களுக்கு பல கஷ்டங்களை ஏற்படுத்தியிருந்தது. பல சிக்கல்களையும் எங்களுக்கு ஏற்படுத்தியிருந்தது. எங்களது நடமாட்டை அது பெருமளவு மட்டுப்படுத்தக்கூடியதாக இருந்தது. அதேவேளை அளவுக்கதிகமான அவர்களது ஆளணி வளமானது பல சந்தர்ப்பங்களில் அவர்களது பலவீனமாகவும் வெளிப்பட்டது. சண்டைகளில் அதிக வீரர்கள் காயப்படவும், இறக்கவும் அவர்களது அளவுக்கதிகமான ஆளணி வளமும் ஒரு காரணம். பெருமளவிலான படைவீராகளைக்கு வினியோகங்களையும், வழங்கல்களையும் மேற்கொள்ளுவதற்கு அவர்கள் அதிக நேரத்தையும், பணத்தையும், சக்தியையும் செலவிடவேண்டி இருந்தது.

இந்தியப் படையின் அடுத்த பலவீனமாக மற்றொன்றையும் குறிப்பிடவேண்டும். இந்தியப் படையினர் சண்டைகளுக்கான உற்சாகத்தைக் கொண்டிருக்கவில்லை என்பதும் அவர்களது ஒரு பெரிய பலவீனம். ஆவர்கள் எதற்காகச் சண்டை செய்கின்றார்கள் என்கின்ற உண்மை பல படைவீரர்களுக்கு தெரிந்திருக்கவில்லை. அவர்கள் மிகவும் குழப்பம் அடைந்த நிலையில் களமிறக்கப்பட்டிருந்தாhகள். ஆவர்கள் தமிழர்களைக் காப்பாற்றவென்று கூறி களமிறக்கப்பட்டிருந்தார்கள். ஆனால் அவர்கள் தமிழர்களைக் கொல்லும்படி உத்தரவிடப்பட்டார்கள். இது பலத்த குழப்பத்தை அவர்களுக்கு ஏற்படுத்தியிருந்தது.

கேள்வி: புலிகளின் பலம் – பலவீனம் பற்றி உங்களது கணிப்பு என்ன?

பதில்: மிதமிஞ்சிய நம்பிக்கையே விடுதலைப் புலிப் போராளிகளின் பலமும், பலவீனமுமாக இருந்தது. எமது போராளிகளிடம் காணப்பட்ட அளவுக்கதிகமான தன்நம்பிக்கையின் விளைவாக பல சந்தர்ப்பங்களில் இந்தியப் படையினருக்கு எதிராக எமது போராளிகள் தமக்குத் தோதில்லாத இடங்களில் வைத்தெல்லாம் தாக்குதலைத் தொடுத்துவிடுவார்கள். தாக்கிவிட்டுத் தப்பிச் செல்லமுடியாத இடங்களில் வைத்துக் கூட இந்தியப் படையின் காவல் உலாக்கள் மீது எமது போராளிகள் தாக்குதலை தொடுத்துவிடுவார்கள். எமது போராளிகளிடம் காணப்பட்ட இந்தகைய மிதமிஞ்சிய தன்நம்பிக்கை, பல சந்தர்ப்பங்களில் எமது தரப்பில் அதிக இழப்புக்கள் ஏற்பட காரணமாக அமைந்திருந்தது. அதேபோன்ற எமது போராளிகளிடையே காணப்பட்ட மிதமிஞ்சிய தன்நம்பிக்கை காரணமாக அவர்கள் சில சந்தர்ப்பங்களில் கவலையீனமாகக் கூட இருந்துவிடும் சந்தர்ப்பங்கள் காணப்பட்டன.

அதேவேளை, இந்த தன்நம்பிக்கை காரணமாக எமது போராளிகள் அளப்பரிய சாதனைகளை புரிந்துள்ளதும் நோக்கத்தக்கது. எதிர்பாராத வெற்றிகளைப் பெற்றிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

கேள்வி: பொதுமக்கள் இழப்புக்களைத் தவிர்க்கும் கையில், இந்தியப் படையினர் தமது கைகளில் ஒன்றைப் பின்னால் கட்டியபடிதான் புலிகளுடன் யுத்தம் புரிந்ததாக இந்தியா கூறுகின்றதே..

பதில்: அவர்கள் ஒருகையைப் பின்னால் கட்டிக்கொண்டு யுத்தம் புரிந்தும் கூட தமிழ் மக்கள் மீது இத்தனை சேதத்தை அவர்கள்; விழைவித்திருக்கின்றார்கள். ஒருவேளை அவர்கள் தமது இருகைகளையும் கொண்டு யுத்தம் புரிந்திருந்தால் எமது மக்கள் எப்படியான ஒரு அழிவை எதிர்நோக்கியிருப்பார்கள் என்று கற்பனை செய்து பார்ப்பதே கஷ;டமாக இருக்கின்றது. உண்மையிலேயே இந்த ஒருகையைப் பின்னால் கட்டிக்கொண்டு சண்டை புரிந்ததென்ற பேச்சில் எந்தவித உண்மையும் கிடையாது. விமானங்களில் இருந்து பொதுமக்கள் குடியிருப்புக்கள் மீது குண்டுகளை அவர்கள் பொழிந்துதள்ளினார்கள். 250 கிலோ கிராம் குண்டுகளை அவர்கள் வானில் இருந்து எமது மக்கள் மீது வீசியெறிந்தார்கள், ஆட்டிலறி குண்டுகளால் சகட்டுமேனிக்கு தாக்குதல்களை மேற்கொண்டார்கள், அப்பாவித் தமிழ் மக்களை அதி உச்சக் கொடுமைகளுக்கு உள்ளாக்கினார்கள். ஒருகையைப் பின்னால் கட்டிக்கொண்டு சண்டையிட்டது| போன்ற பேச்செல்லாம், அவர்கள் தமது தோல்வியை மறைக்கக் கூறும் காரணங்களேயன்றி வேறொன்றும் இல்லை.

கேள்வி: இந்திய இராணுவத்தினருடனான யுத்தத்தில் சுமார் ஆறாயிரம் தமிழ் பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கின்றார்களே. உண்மையிலேயே இந்த இழப்பு அவசியமான ஒன்றுதானா?

பதில்: இந்த யுத்தத்தில் ஒரு விடயத்தை ஆக்கிரமிப்பாளர்களுக்குத் நாங்கள் தெளிவுபடுத்தியிருக்கின்றோம். எமது மக்களின் சுதந்திரத்திலும், விடுதலையிலும் எந்த ஒரு சக்தி தலையிடுவதற்கும் நாம் அனுமதிக்கமாட்டோம் என்கின்ற உண்மையை நாங்கள் நிரூபித்திருக்கின்றோம்.

கேள்வி: இந்த சண்டை மூலம் நீங்கள் எதனைப் பெற்றுக்கொண்டீர்கள்?

பதில்: தன்னம்பிக்கையப் பெற்றுக்கொண்டுள்ளேன். புதிய உற்சாகத்தைப் பெற்றுக்கொண்டுள்ளேன். எனது மக்களின் பூரண ஆதரவைப் பெற்றுக்கொண்டுள்ளேன்.

கேள்வி: ரனசிங்க பிரேமதாசவுடன் எதற்காக தற்பொழுது பேச்சுவார்த்தை நடாத்திவருகின்றீர்கள்?

பதில்: இந்தியா எங்களுக்குத் தமிழ் ஈழத்தைப் பெற்றுத்தரும் என்று எமது மக்கள் நம்பியிருந்தார்கள். மாறாக இந்தியா எமது விருப்பத்தையும் மீறி சிறிலங்கா அரசுடன் ஒப்பந்தம் ஒன்றைச் செய்தது. எந்த ஒரு அன்னிய சக்தியும் எங்கள் பிரச்சினையில் தலையிட்டு, எங்கள் மீது ஆதிக்கத்தைச்; செலுத்தவும், நாங்கள் தொடர்பான முடிவை எடுப்பதையும் நாங்கள் விரும்பவில்லை. எனவேதான் சிறிலங்கா அரசுடன் பேச்சுவார்த்தை முயற்சி ஒன்றில் நாங்கள் ஈடுபட ஆரம்பித்துள்ளோம். பிரேமதாசாவும் இதேவகையிலான ஒரு நிலைப்பாட்டைத்தான் கொண்டுள்ளார். வெளிநாட்டு தலையீட்டை முதலில் முடிவுக்குக் கொண்டு வரவேண்டும் என்று நாங்கள் இரண்டு தரப்பினருமே முடிவு செய்திருந்தோம்.

கேள்வி: தற்பொழுது இந்திய இராணுவம் வெளியேறிவிட்டது. மறுபடியும் சிறிலங்கா இராணுவம் தமிழர்கள் மீது தாக்குதலை தொடுக்கும் என்று பலர் அச்சம் வெளியிடுகின்றார்களே?

பதில்: எமது மக்களுக்கு எதிரான சிறிலங்கா அரச பயங்கரவாதம் பற்றிய ஒரு நீண்ட வரலாறு எமக்கு இருக்கின்றது என்பது உண்மைதான். ஆரம்பத்தில் தமிழர் தரப்பு சமாதான முறையில் கோரிக்கைகளை விடுத்து, அந்தக் கோரிக்கைகள் கோரக் கரம் கொண்டு அடக்கப்பட்டதனால்தான் நாம் ஆயுதம் ஏந்திப் போராடுவதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டோம். தமிழ் முஸ்லிம் மக்களுக்கு எதிராக சிறிலங்கா அரசு மீண்டும் அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட முயன்றால், அதனை எதிர்த்து யுத்தம் புரிவதைத் தவிர எங்களுக்கு வேறு வழி இல்லை.

கேள்வி: நீங்கள் தமிழ் ஈழத்திற்கான கோரிக்கையைக் கைவிட்டு விட்டீர்களா?

பதில்: இல்லை. கைவிடவில்லை.

Leave A Reply

Your email address will not be published.