2ஆம் திருமணத்தை கொண்டாட்டமாக்கி புரட்சி செய்த செளந்தர்யா ரஜினிகாந்த்

0

சௌந்தர்யா திருமணம் குறித்து தமிழக பத்திரிகையாளர் வினி சர்பனா எழுதிய பதிவு

மறுமணம் என்றாலே சமூகத்தின் ஏளனங்களுக்கு அச்சப்பட்டு இரகசியமாகவோ அல்லது எளிமையாகவோ செய்யவேண்டும் என்கிற அவசியமில்லை. ஒரு பெண்ணின் இரண்டாம் திருமணம்தான் இன்னும் கொண்டாட்டத்தோடு செய்யவேண்டும்.

தாலி கட்டிவிட்டாலே ‘அதுதான் வாழ்க்கை… அனைத்தையும் அட்ஜஸ்ட் செய்துகொண்டு வாழவேண்டும்…கல்லானாலும் கணவன்…புல்லானாலும் புருசன் என்றுச் சொல்லிக்கொண்டு கணவனையோ… கணவன் வீட்டார் என்ன நெருக்கடிகளை கொடுத்தாலும் சகித்துக்கொண்டு வாழவேண்டும்’ என்று நரக வாழ்க்கை வாழ்வதைவிட பிரிந்து புதிய வாழ்க்கையை தேர்ந்தெடுத்துக் கொள்வதில் எந்த தவறும் இல்லை.

அதனால், இதுபோன்ற மறுமணங்களை கொண்டாடினால்தான் அவளைப் பார்த்து கனவுகளை புதைத்துவிட்டு குழந்தைக்காக வாழும் பெண்கள் மறுமணம் செய்துகொள்வார்கள். மறுமணம் தவறில்லை என்று நினைப்பார்கள். தன்னைப் பற்றியும் யோசிப்பார்கள்.

மகிழ்ச்சியாக இருக்கிறது. வாழ்த்துகள் செளந்தர்யா ரஜினிகாந்த். இவ்வாறு கூறியுள்ளார் வினி சர்பனா.

ஏற்கனவே அஸ்வின் என்ற தொழில் அதிபருடன் திருமணமான சௌந்தர்யா, 2017இல் அவரை விவாகரத்து செய்திருந்தார்.

செளந்தர்யா ரஜினிகாந்த் (இயற்பெயர்: சக்கு பாய் ராவ் கெய்க்வாட். பிறப்பு: 20 செப்டம்பர் 1984) முதன்மையாக தமிழ் சினிமாவில் பணியாற்றும் வரைகலை வடிவமைப்பாளர், தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் ஆவார். இவர் ஆக்கர் பிக்சர் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் உரிமையாளர் ஆவார். ஒரு வரைகலை வடிவமைப்பாளராக தனது வாழ்க்கையை தொடங்கிய செளந்தர்யா, அவரது தந்தை ரஜினிகாந்த் நடித்த படங்களில் தலைப்புக் காட்சிகளை வடிவமைக்கத் தொடங்கினார். அவர் கோவா திரைப்படத்தின் மூலம் ஒரு குறிப்பிடத்தக்க திரைப்பட தயாரிப்பாளராகவும் ஆனார். ரசினிகாந்த் நடித்த கோச்சடையான் திரைப்படத்தில் ஒரு இயக்குனராக அறிமுகமானார்.

Leave A Reply

Your email address will not be published.