400 மொழிகளில் பேச, எழுத, டைப்பிங் செய்யத் தெரிந்த 12 வயது சிறுவன்! ஞாபக உத்தி இதுதான்!

0

ஞாபக சக்தியை வளர்க்க சிறுதானிய உணவுகளை மாணவர்கள் உட்கொள்ள வேண்டுமென 400 மொழிகளை கற்றுத் தேர்ந்த உலக சாதனையாளரான அக்ரம் தெரிவித்துள்ளார். 

12 வயதான மஹ்மூத்  அக்ரமிற்கு 400 மொழிகளில் எழுதவும், படிக்கவும், வேகமாக டைப்பிங் செய்யவும் தெரியும். இந்த அபாரத் திறமையின் மூலம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி வரும் அவர், டைப் ரைட்டிங்கில் 3 உலக  சாதனை புரிந்துள்ளார். இந்த 12 வயது சாதனையாளர் அக்ரம் சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார். 

ஃபாஸ்ட் புட் கலாச்சாரத்தால் ஞாபக மறதி ஏற்படுவதாக கூறினார். அது போன்ற உணவுகளையும், சீனி, மைதா போன்றவற்றையும் தவிர்க்க வேண்டுமென அறிவுறுத்திய அவர், ஞாபக சக்தி அதிகரிக்க கேழ்வரகு, திணை, சோளம், குதிரைவாலி ஆகியவற்றை காலை உணவாக எடுத்துக்கொள்ள வேண்டுமெனவும் அறிவுறுத்தினார்.

Leave A Reply

Your email address will not be published.