அதிகம் பாசம் காட்டிய தந்தை! இரக்கம் இன்றி பெற்ற குழந்தையை கொடூரமாக கொன்ற தாய் ! அதிர்ச்சி சம்பவம்

0

தாய் குழந்தை ஒன்றை கொலை செய்த சம்பவம் ஒன்று அண்மையில் இடம்பெற்றுள்ளது.

உக்ரைனில் கணவர் ஒருவர் மூன்று மாத குழந்தைக்கு அதிகம் பாசம் காட்டுவதை பொறுக்காமல் பெற்ற தாய் இந்த காரியத்தை செய்துள்ளார்.

உக்ரைனை சேர்ந்த 21 வயதான பெண் ஒருவர் தான் பெற்ற மூன்று வார குழந்தையின் வாய்க்குள் கத்தியை செலுத்தி கொலைசெய்துள்ளார்.

குறித்த பெண்ணின் கணவர் வீடு திரும்பும் போது இரத்த கறை படிந்த கத்தியை மனைவி கையில் இருப்பதை கணவர் அவதானித்துள்ளார். அது தொடர்பில் என்ன என வினாவியபோது அதற்கு மனைவி பதில் கூறவில்லை இந்நிலையில் தேடி பார்த்த போது தனது குழந்தையின் ரத்தம் என்பது தெரியவந்துள்ளது.

குறித்த குழந்தையை அவசர சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு எடுத்து செல்லும் போது மூன்றுவார குழந்தை உயிரிழந்துள்ளது.

26 வயதான நபரே குறித்த குழந்தையின் தந்தை ஆவார். சம்பவத்துடன் தொடர்புடைய பெண் கைதுசெய்யப்பட்டபோது இந்த விடயத்தை நம்ப முடியவில்லை என குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் குறித்த பெண்ணின் மாமியார் தெரிவிக்கையில்,

என்னுடைய மகன் குழந்தைக்கு அதிகம் பாசம் காட்டினான் நான்றாக பாதுகாத்து வந்தான் என்னால் குறித்த சம்பவம் தொடர்பாக நம்பமுடியவில்லை.

இந்நிலையில் குழந்தையை கொன்ற பெண் மனநலம் பாதிக்கப்பட்டவரென தெரியவந்துள்ளது.

இந்நிலையில் குறித்த பெண்ணுக்கு 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.