அதிமுகவுக்கு ஆதரவாக களம் இறங்கிய கார்த்திக்! நவரச பேட்டி!

0

தேர்தல் நேர அரசியல்வாதிகளில் நடிகர் கார்த்திக் குறிப்பிடத் தக்கவர். தேர்தல் நேரத்தில் திடீரென்று கட்சி ஆரம்பித்து, தனித்து போட்டி, கூட்டணி போட்டி என்று அதகளப்படுத்துவது அவர் வழக்கம்.

நாடாளும் மக்கள் கட்சி என்ற பெயரில் கடந்த சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டவர், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் அலுவலகம் வருகிறார் என்று செய்தி பரவ, அவர் காங்கிரசில் இணைகிறார் என்று செய்தியும் வெளியானது. பின்னர்,  காங்கிரசுக்கு ஆதரவாக மட்டுமே பிரசாரம் செய்ய உள்ளதாக அவர் தெரிவித்தது ஏக காமெடி.

இந் நிலையில் அதிமுக தலைமைக் கழகம் வந்த கார்த்திக், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் ஆகியோருக்கு சால்வை அணிவித்து, அதிமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக கூறினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கார்த்திக், ஹே, நான் அதிமுகவுக்கு பிரஷாரம் செய்யப் போகிறேன். அதிமுக தேர்தல் அறிக்கை அற்புதம் என்று பாராட்டினார். அதிமுகவில் சேர்ந்து விட்டீர்களா என்று நிருபர்கள் கேட்க, ஹே, அப்டிதான், கிட்டத்தட்ட அப்டிதான்னு வைத்துக் கொள்ளுங்கள் என்ற அவர், அதிமுகவுக்கு ஆதரவா பிரசாரம் செய்யப் போகிறேன்னு வெச்சுக்குங்க என்று ஏகத்துக்கும் குழப்பினார்.

Leave A Reply

Your email address will not be published.