அமமுகவுக்கு மேலும் ஒரு முஸ்லீம் அமைப்பு ஆதரவு! திமுகவுக்கு திக்திக்..

0

மதச்சார்பற்ற கூட்டணி என்பதால் ஒட்டுமொத்த முஸ்லீம் சமூக வாக்குகளை மொத்தமாக தன் பக்கம் அள்ள நினைத்த திமுகவுக்கு, அடுத்தடுத்து டிடிவி தினகரன் தரப்பினர் அதிர்ச்சி கொடுத்து வருகின்றனர்.

திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கிய நிலையில், மனித நேய மக்கள் கட்சிக்கு தொகுதி இல்லை என திமுக தரப்பில் தெரிவித்தனர். இருப்பினும் அக் கட்சியினர் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர் என்றாலும் தொண்டர்கள் கடும் கோபத்துடன் உள்ளனர்.

இந் நிலையில் பாஜகவை கடுமையாக எதிர்க்கிறார் என்பதால், டிடிவி தினகரன் கட்சிக்கு முஸ்லீம்கள் மத்தியில் ஆதரவு உள்ளது. அவர் போட்டியிட்ட ஆர்.கே.நகர் தொகுதியில் முஸ்லீம் சமூக வாக்குகள் பெருவாரியாக விழுந்து, அவரது வெற்றிக்கு உதவியது. அதனால்தான், அப்போது அவருக்கு ஆதரவாக செயல்பட்ட எஸ்.டி.பி.ஐ கட்சிக்கு அமமுகவில் ஒரு  தொகுதி இப்போது வழங்கப்பட்டுள்ளது. 

இந் நிலையில் இன்று டிடிவி தினகரனை, அவரது இல்லத்தில்  இந்திய தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் எஸ்.எம்.பாக்கர். முனீர் ஆகியோர் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். இந்த அமைப்பு தேர்தலில் போட்டியிடாத அமைப்பென்றாலும், தீவிர பிரசாரத்தில் ஈடுபடும் அமைப்பாகும்.

 மேலும் கே.எம். ஷரீப் தலைமையிலான தமிழக மக்கள் ஜனநாயக கட்சியும் அமமுக வுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.   முஸ்லீம் அமைப்புகள் டிடிவி தினகரன் கட்சிக்கு ஆதரவு கொடுப்பது, திமுக தரப்புக்கு பலத்த அதிர்ச்சியை கொடுத்துள்ளது. 

குறிப்பாக தயாநிதி மாறன் போட்டியிடும் மத்திய சென்னையில் அமமுக கூட்டணியான எஸ்.டி.பி.ஐ கட்சியின் தேசிய துணைத்தலைவர் தெஹ்லான் பாகவி போட்டியிடுவது, திமுக தரப்புக்கு  தினகரன் வைத்த முதல் செக் என்றே அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.