அமைச்சர்களுக்கு ஆப்பு வைத்த மைத்திரி !

0

அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துகொள்ள வரும் அமைச்சர்களுக்கு கையடக்கத் தொலைபேசியை எடுத்து வருவது தடை செய்யப்பட்டுள்ளது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதி இந்த தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

சில அமைச்சர்கள் அமைச்சரவைக் கூட்டத்தின் போது தொலைபேசி அழைப்புக்களை எடுப்பது மற்றும் அழைப்புக்களுக்குப் பதிலளிப்பது போன்ற காரணத்துக்காகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் ஜனாதிபதி எடுத்துள்ள தீர்மானத்தை அங்கீகரித்து கருத்துத் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.