அரசு ஊழியர்களுக்கு தலா ரூ.25 ஆயிரம்! தமிழக அரசு தடாலடி!

0

தேர்தலை முன்னிட்டு மத்திய, மாநில அரசுகள் சார்பில் ஒவ்வொருவர் அக்கவுண்டிலும் பணம் வரும் வகையில் சலுகை மழை பொழியத் தொடங்கி உள்ளது. 

மத்திய அரசின் சார்பில் விவசாயிகளுக்கு தலா 6 ஆயிரம், மாநில அரசு சார்பில் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பத்திற்கு தலா 2 ஆயிரம் என வங்கி கணக்கில் பணம் விழத் தொடங்கி உள்ளது.

 இந் நிலையில், தமிழக அரசு ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையை எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு திடீரென நிறைவேற்றி, அரசு ஊழியர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளனர்.

அதாவது, அரசு ஊழியர்கள் தங்கள் இல்ல நிகழ்ச்சிகள்  மூலம்  உறவினர்கள், நண்பர்கள் மூலம் மொய்ப் பணமாக அல்லது நன்கொடையாக 5 ஆயிரம் மட்டுமே வாங்க முடியும் என்று விதிமுறை இதுவரை இருந்தது. இனி 25 ஆயிரம் வரை நன்மொடையோ, மொய்யோ பெற முடியும் என்று சலுகையை அறிவித்துள்ளது. ஆனால் இதுகுறித்து விவரங்களை நிகழ்ச்சி நடத்திய ஒரு மாதத்தில் அரசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.