அஷ்வின்: போட்டியில் ஜோஸ் பட்லரை அவுட் செய்த விதம் சரியா?

0

ஐபிஎல் போட்டிகள் தொடங்கி 3 நாட்களே ஆன நிலையில், முதல் சர்ச்சைக்கு வித்திட்டிருக்கிறார் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டன் ரவிசந்திரன் அஸ்வின். ராஜஸ்தான் அணியின் பேட்ஸ்மேன் ஜோஸ் பட்லரை அவர் அவுட்டாக்கிய விதம் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.

நேற்று இரவு, ராஜஸ்தான் – பஞ்சாப் அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மிகவும் விறுவிறுப்பாக சென்ற ஆட்டத்தில் தங்கள் பேட்ஸ்மேன் ஜோஸ் பட்லரின் விக்கெட் எதிர்பாராத முறையில் வீழ்ந்தது ராஜஸ்தான் அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

பேட்ஸ்மேன் ஜோஸ் பட்லர் 69 ரன்கள் எடுத்திருந்த நிலையில், பந்துவீச்சாளர் அஸ்வின் எதிர் முனையில் இருந்த பேட்ஸ்மேனுக்கு பந்துவீசத் தயாரானார். அப்போது, கிரீஸைவிட்டு வெளியேறி ஓடத் தயாரானார் ஜோஸ் பட்லர். அப்போது பந்துவீச வந்த அஸ்வின், பந்தை வீசாமலே ஜோஸ் பட்லரின் ஸ்டம்பை பந்தால் தட்டி சடாரென அவுட் செய்தார். இப்படி அவுட் செய்யும் முறைக்கு மன்கட் என்று பெயர். 2014ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிரான இங்கிலாந்து ஒருநாள் போட்டியில் இதேபோன்று பட்லர் அவுட் செய்யப்பட்டார்.

மன்கட் என்றால் என்ன?

‘மன்கட்’ முறைக்கு அப்படிப் பெயர் வரக் காரணமே ஒரு பழம்பெரும் இந்திய பந்துவீச்சாளர்தான். 1947ல் நடைபெற்ற இந்தியா – ஆஸ்திரேலியா ஆட்டத்தில், வினு மன்கட் என்ற இந்திய பந்துவீச்சாளர் இதே போன்று ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் பில் பிரவுனை அவுட் செய்தார்.

வினு மன்கட்
Image captionவினு மன்கட்

அதில் இருந்து இது ‘மன்கட்’ முறை என்று அழைக்கப்படுகிறது. கிரிக்கெட் சட்டத்திட்டத்தின்படி, பந்தை எதிர்கொள்ளும் பேட்ஸ்மேனுக்கு எதிர்தரப்பில் இருக்கும் பேட்ஸ்மேன் பந்துவீசப்படுவதற்குமுன் கிரீஸைவிட்டு வெளியே சென்றால் பந்துவீச்சாளரால் அவுட் செய்ய முடியும். கிரிக்கெட் சட்டத்தின்படி இது அவுட்டாக கணக்கில் எடுத்துகொள்ளப்படும் என்றாலும், விளையாட்டின் பொதுப் பண்புக்கு ‘மன்கட்’ எதிராகப் பார்க்கப்படுகிறது. சில கிரிக்கெட் ஜாம்பவான்கள் இதை மலிவான உத்தியாகவும் பார்க்கிறார்கள்.

கடும் வசைவுகளை எதிர்கொள்ளும் அஷ்வின்

பட்லரை அவுட்டாக்கியதற்காக பந்துவீச்சாளர் அஷ்வின் சமூக ஊடகங்களிலும், சக விளையாட்டு வீரர்கள் மத்தியிலும் கடும் வசைவுகளை எதிர்கொண்டு வருகிறார்.

ஜோஸ் பட்லரை, அஷ்வின் அவுட் செய்த விதம் சரியா?

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் பணியாற்றும் ஷேர்ன் வார்ன், அஸ்வின் கிரிக்கெட்டுக்கு அவப்பெயர் ஏற்படுத்தியுள்ளதாகவும், போட்டியின் பண்பாட்டை மலிவான உத்தியால் கெடுத்துவிட்டார் என்றும் சாடியுள்ளார்.

கிரிட்கெட்டிற்கு ஆர்வத்துடன் வரும் இளைய தலைமுறையினருக்கு ஒரு தவறான முன்னுதாரணத்தை அஸ்வினின் இந்த செயல்பாடு வழங்கும் என்றும், இந்த செயலுக்காக அஸ்வின் வருந்துவார் என்றும் கிரிக்கெட் வீரர் இயன் மார்கன் தெரிவித்துள்ளார்.

“அஷ்வின் மீது தவறில்லை”

ஜோஸ் பட்லரை, அஷ்வின் அவுட் செய்த விதம் சரியா?

பிரபல கிரிக்கெட் வர்ணணையாளர் ஹர்ஷா போக்லே, “பட்லரை அஸ்வின் அவுட் செய்துள்ளார். ஐசிசியின் சிறப்பு குழுவில் அங்கம் வகிக்கும் மூன்றாம் அம்பயருக்கு இந்த முடிவு கொண்டு செல்லப்பட்டு முடிவெடுக்கப்பட்டது. இது, முழுக்க முழுக்க அம்பயரின் முடிவே.” என்று தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.