ஆண் பாலியல் தொழிலாளியாக பணி புரிந்தாரா ரஞ்சன் ?உண்மையை போட்டுடைத்த எம்பி

0

இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவை ஆண் பாலியல் தொழிலாளி என குறிப்பிடப்பட்டுள்ளது.

மஹிந்த அணியினர் இவ்வாறு விளித்தமை காரணமாக சபையில் அமைதியின்மை ஏற்பட்டிருந்தது.

இந்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தின் பொது தொழில் முயற்சி, கண்டிய மரபுரிமை மற்றும் கண்டிய அபிவிருத்தி அமைச்சு, டிஜிட்டல், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் தகவல் தொழிநுட்பம் மற்றிய அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சு மற்றும் விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி பற்றிய அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சு மீதான நிதி ஒதுக்கீடு தொடர்பான குழுநிலை விவாதம் நேற்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்று வருகின்றது.

இந்த குழுநிலை விவாதத்தில் பங்கேற்று கருத்து வெளியிட்ட மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் அருந்திக்க பெர்ணாண்டோ, இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவை ஆண் பாலியல் தொழிலாளி என குறிப்பிட்டு கருத்து வெளியிட்டார்.

இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க வெளிநாடு ஒன்றில் ஆண் பாலியல் தொழிலாளியாக பணிபுரிந்தார் எனவும் அருந்திக்க பெர்ணாண்டோ குறிப்பிட்டார்.

இதனைத் தொடர்ந்து அவரின் கருத்திற்கு எதிர்ப்பு வெளியிட்ட இராஜாங்க அமைச்சர் ஹர்ச டி சில்வா, ரஞ்சன் ராமநாயக்கவை இவ்வாறு குறிப்பிட உரிமை இல்லை எனவும் தெரிவித்தார்.

தாம் அங்கம் வகிக்கும் கட்சியினை சேர்ந்த ஒருவரை இவ்வாறு விளிக்கும் அதிகாரம் யாருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதன்காரணமாக நாடாளுமன்றத்தில் சிறிது நேரம் குழப்பநிலை ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.