இந்துக்களின் சமரில் இராணுவ அணிவகுப்பு இடம்பெற்றமை குறித்து கூட்டமைப்பு கண்டனம்!

0

யாழ்ப்பாணம்- கொழும்பு இந்துக் கல்லூரிகளுக்கு இடையிலான துடுப்பாட்ட சமர் வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கப்பட்டது.

இதன் ஆரம்ப நிகழ்வின்போது இராணுவத்தினரின் அணிவகுப்புடன், அவர்களின் நடன, உடற்பயிற்சி அணியினரின் பங்குபற்றுதல் இடம்பெற்றுள்ளது.

இத்தகைய செயற்பாடு குறித்து மிழ் தேசிய கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.

இது ஒரு கூட்டமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது-

தமிழ் மக்களின் பொது நிகழ்வுகளில் இராணுவத்தினரின் பங்குபற்றல் இருக்கக்கூடாது என்பதில் தமிழ் சமூகமும், மக்கள் பிரதிநிதிகளும் உறுதியாக உள்ளனர். அதை பல்வேறு போராட்டங்களின் மத்தியில் கடைப்பிடித்தும் வருகின்றனர். மேலும் வடக்கு கிழக்கு மாகாணங்கள் எங்கும் போர்க்குற்றங்கள் இராணுவப் பிரசன்னத்துக்கும், ஆக்கிரமிப்புக்கும் எதிராக தீரமிகு போராட்டங்களை தமிழ் மக்கள் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றனர்.

இப்படியான ஒரு சூழ்நிலையில் வடக்கு மற்றும் தலைநகரில் அமைந்துள்ள புகழ்பெற்ற தமிழ் பாடசாலைகளுக்கு இடையிலான நீண்ட காலப் பாரம்பரியம் உடைய துடுப்பாட்ட போட்டியில், இப்படியான ஒரு சம்பவம் இடம் பெற்றிருப்பது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது என குறிப்பிடபட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.