இந்த பச்சைக்கிளிக்கு இவ்வளவு மவுசா; அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்திய விளம்பரம்!

0

இந்தியா மாநிலமொன்றில் முன்னாள் அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் காணாமல் போன தனது கிளியை கண்டுபிடித்து தருவோருக்கு ரூ.20 ஆயிரம் பரிசு தரப்படும் என்று அறிவித்திருப்பது அப்பகுதி மக்களிடத்தில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

உத்தரபிரதேசத்திலேயே இந்த வினோத சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும்.,

உத்தரபிரதேச மாநிலம் ராம்பூரை சேர்ந்த சனம் அலி கான் (37). இவர் முன்னாள் அரச குடும்பத்தை சேர்ந்தவர். அவர் கடந்த 9 ஆண்டுகளாக ஒரு பச்சைக் கிளி ஒன்றை வளர்த்து வந்துள்ளார்.

நன்றாக பேசும் அந்த கிளிக்கு மித்து என்கிற பவுலி என பெயரிட்டு இருந்தார். அந்த கிளியை கடந்த சில நாட்களாக காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

காணாமல் போன கிளியின் போட்டோ ‘வாட்ஸ் அப்’பில் வெளியிடப்பட்டது. நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இருந்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இந்நிலையிலேயே, காணாமல் போன கிளியை கண்டுபிடித்து தருவோருக்கு ரூ.20 ஆயிரம் பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.