இன்னும் 10 நாட்களுக்குள் மின்சார நெருக்கடிக்கு தீர்வு!

0

புத்தாண்டு தினங்களில் நாட்டில் எந்தவொரு இடத்திலும் மின் சாரம் துண்டிக்கப்பட மாட்டாது என மின் சக்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

மின்சார நெருக்கடி இன்னும் 10 நாட்களுக்கு மாத்திரமே காணப்படும். அதன் பிறகு சுமுகமான நிலைமை உருவாகும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இரவு நேரத்தில் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு பொது மக்களிடம் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு சாதகமான பதில் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

Leave A Reply

Your email address will not be published.