இப்ப எதுக்கு வந்தீங்க! பாய்ந்த தூத்துக்குடி மக்கள்!!தமிழிசையின் பரிதாப நிலை!!!

0

அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ளபா.ஜ.கவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதில் ஒன்று தூத்துக்குடி தொகுதி. இந்த தொகுதியில் தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து தி.மு.க. சார்பில் கனிமொழி போட்டியிடுகிறார்.

தூத்துக்குடியில் பிரசாரம் செய்வதற்காக தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சென்றிருந்தார்.  அப்போது அவரை மக்கள் சூழ்ந்து கொண்டு இப்போது மட்டும் ஏன் வருகிறீர்கள் என்று கேள்வி எழுப்பினர்.

மேலும் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டின் போது மக்களை வந்து சந்திக்காமல் இப்போது வந்து சந்திக்கிறீர்களே… என்று ஆவேசமாக கூறினார்கள். அங்கு நிலவிய சூழ்நிலையை பார்த்ததும் உடன் வந்தவர்கள் தமிழிசையை அங்கிருந்து பத்திரமாக அழைத்துச் சென்றனர்.

Leave A Reply

Your email address will not be published.