இலங்கைக்கான காலநீடிப்பு தொடர்பில் சிவசக்தி ஆனந்தன் காட்டம்!

0

இலங்கைக்கு மேலும் கால நீடிப்பு வழங்குவது என்பது தமிழ் மக்களின் நலனை கருத்திற்கொண்டதல்ல என நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

மாறாக அரசாங்கத்தை பாதுகாப்பதற்கான செயற்பாடாகவே இது அமைந்துள்ளது என்றும் குறிப்பிட்டார்.

வவுனியாவில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

ஆனால், இந்த காலநீடிப்பு கண்காணிப்பிற்காகவே வழங்கப்படுகிறது என கூட்டமைப்பு புதுக்கதை தெரிவித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இவ்வாறாக அரசாங்கத்திற்கு ஆதரவாக செயற்பட்டுவரும் தமிழரசு கட்சியின் தலைவர்கள், தமிழ் மக்களால் அண்மைய நாட்களில் முன்னெடுக்கப்படும் போராட்டங்களிலும் பங்கேற்பது அவர்களின் இரட்டை முகத்தை வெளிப்படுத்துவதாகவும் விமர்சித்தார்.

Leave A Reply

Your email address will not be published.