இலங்கைக்கான கால அவகாசம் தொடர்பில் விக்கினேஸ்வரன் கவலை!

0

ஐ.நா மனித உாிமைகள் ஆணையகம் இலங்கை ஆட்சியாளா்களுக்கு மேலும் 2 வருட கால அவகாசம் வழங்கியுள்ளமையும், கால அவகாசத்திற்கு வலுச்சோ்க்கும் வகையில் தமிழ்தேசிய கூட்டமைப்பினா் நடந்து கொண்ட விதமும் வேதனையளிப்பதாக வடமாகாண முன்னாள் முதலமைச்சா் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது;

ஐக்கிய நாடுகள் சபையில் 2015 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்தை நிறைவேற் றுவதற்கு மேலும் இரண்டு வருட காலம் வழங்கி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் 21.03.2019 அன்று உறுப்பு நாடுகள் இலங்கை அரசாங்கத்தின் அனுசரணையுடன் 40.1 என்ற தீர்மானத்தினை நிறைவேற்றி இருப்பது தமிழ் மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்திருக்கி ன்றது.

போரக் குற்றம் மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்களை இழைத்தவர்கள் தண்டனையில் இருந்து தப்புவதற்கும் எமது மக்களுக்கு எதிராக மனித உரிமை மீறல்கள் தொடர்ந்து இழைக்கப்படுவதற்குமே இந்தப் பிரேரணை வழிவகுக்கப்போகின்றது.

இனப்படுகொலை புரிந்து எமது பெண்களை நூற்றுக்கணக்கில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய இராணுவத்தை தண்டனையில் இருந்து காப்பாற்றும் வகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு இந்த பிரேரணைக் கு சார்பாக செயற்பட்டமையும் வேதனையை அளிக்கின்றது. 30.1 தீர்மானம் நிறைவேற்றப்பட்டு சுமார் 3 ஆண்டுகளுக்கும் மேல் கடந்துள்ள நிலையில் அதனை நிறைவேற்றுவதற்கான எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவோ அல்லது அவற்றை நிறைவேற்ற வோ விருப்பம் எதனையும் வெளியிடாத இலங்கை அரசாங்கம் மாறாக இந்த தீர்மானத்தின் முக்கிய பல விடயங்களை மீண்டும் மீண்டும் நிராகரித்தே வந்துள்ளது. வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்கிய கலப்பு நீதிமன்றம் உருவாக்கப்படவேண்டும் என்ற 30.1 தீர்மானத்தினை நிறைவேற்ற வலியுறுத்தும் 40.1 தீர்மானத்துக்கு அனுசரணை வழங்கிக்கொண்டே க லப்பு நீதிமன்ற யோசனையை இலங்கை அரசாங்கம் மனித உரிமைகள் சபையில் கடந்த வாரம் உத்தி யோகபூர்வமாக நிராகரித்திருக்கின்றது. இது எந்த அளவுக்கு இலங்கை அரசாங்கம் 30.1 தீர்மானத்தினை நிறைவேற்றுவதற்கு அக்கறை கொண்டிருக்கிறது என்பதனையும் அதன் நேர்மைத் தன்மையையும் அதன் ஏமாற்று தந்திரத்தையும் வெளிச்சம்போட்டு காட்டுகின்ற. ஐ. நா வுக்கு எழுத்துமூலம் கொடுத்த வாக்குறுதிகளையே அடுத்த நிமிடம் காற்றில் பறக்கவிடும் இலங்கை அர சாங்கம் கடந்த பல தசாப்த கால இனப்பிரச்சினையில் எத்தனை ஒப்பந்தங்களை உதாசீனம் செய்திருக் கும் என்பதனையும் இது எந்தளவுக்கு தமிழ் மக்களுக்கு ஏமாற்றத்தையும் விரக்தியையும் கொடுத்திருக்கும் என்பதையும் சர்வதேச சமூகம் புரிந்துகொள்ளவேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.