இலங்கையில் இராணுவ சீருடையை ஒத்த ஆடைகளை அணிந்தால் சிறைதண்டனை!

0

இராணுவத்தின் சீருடையை ஒத்த ஆடைகளை பயன்படுத்துபவர்களுக்கு சிறைதண்டனை விதிக்கப்படவுள்ளதாக இராணுவம் அறிவித்துள்ளது. இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தப்பத்து இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

இராணுவச் சீருடையை ஒத்த ஆடைகள் அணிந்தால் ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்க வாய்ப்புள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பாதாள உலகக்குழுக்கள் உள்ளிட்ட பல குற்றவாளிகள், இராணுவச்சீருடையை ஒத்த ஆடைகளில் குற்றங்களில் ஈடுபட்டுள்ளமையை சுட்டிக்காட்டியுள்ள அவர், சினிமாவில் இராணுவச்சீருடை பயன்படுத்தப்படுவது தொடர்பாகக கவனம் செலுத்தப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டின் பாதுகாப்பு மற்றும் கண்ணியத்துடன் தொடர்புடைய இந்த விடயத்தில் தற்போது கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தப்பத்து தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.