இவ்வருடத்துக்குள் 8500 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம்

0

இவ்வருடத்துக்குள் 8500 பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப் போவதாக கல்வி அமைச்சர் அகில விராஜ்காரியவசம் தெரிவித்தார்.

பட்டதாரிகள் 20 ஆயிரம் பேருக்கு அரச தொழில் வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் ஆரம்ப கட்டமாக 500 பேர் முதலில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதுடன், தேசிய பாடசாலைகளுக்காக மேலும் 3500 ஆசிரியர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

இதேவேளை, உயர் தரம் கற்கும் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இவ்வருடத்துக்குள் நிச்சயமாக டெப் ரக கணனிகள் வழங்கப்படும் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.